Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 21 பிப்ரவரி, 2022

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்கிறீர்களா; வருமான வரி விதிகள் கூறுவது என்ன !

 கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்கிறீர்களா; வருமான வரி விதிகள் கூறுவது என்ன !

"கிரிப்டோ" அல்லது "டோக்கன்" என்றும் அழைக்கப்படும் கிரிப்டோகரன்சியில் உலகெங்கிலும் உள்ள ஏராளமானோர் பெரும் தொகையை முதலீடு செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2022-23 மத்திய பட்ஜெட்டை முன்வைத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரிப்டோகரன்சிகள் மீது 30% வரி விதிக்கப்படும் என அறிவித்தார்.

பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை என்பதையோ, அனுமதி உண்டு என்பதையோ தெளிவாக குறிப்பிடவில்லை என்றாலும், 30% வரி உண்டு என்பதைத் உறுதியாக சொல்லியிருக்கிறார். ஆனால், வரி விதித்திருப்பதால், இந்தியாவில் இந்த முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பதாக முதலீட்டாளர்கள் எடுத்துக்கொள்ள முடியாது. 

இதன் மூலம் கிரிப்டோவில் முதலீடு செய்பவர்கள் தங்கள் முதலீட்டில் கிடைக்கும் வருமானம் குறித்து அரசுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றூம், மீறினால் அவர்கள் சிக்கலை சந்திக்க நேரிடலாம் என புரிந்து கொள்ளலாம். 

கிரிப்டோ மற்றும் என்எப்டி போன்ற மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும். கிரிப்டோ லாபத்தின் மீதான வருமான வரியைப் புகாரளிக்கும் போது கையகப்படுத்துதலுக்கான செலவைத் தவிர, விலக்கு எதுவும் அனுமதிக்கப்படாது. கிரிப்டோ அல்லது எந்த டிஜிட்டல் சொத்திலிருந்தும் ஏற்படும் இழப்புகளை வேறு எந்த வருமானத்துடன் இணைத்து சலுகை கோர இயலாது. டிஜிட்டல் சொத்தின் மூலம் இலாபம் பெறுபவர் வரி செலுத்த வேண்டும்.

ஒரு நபர் கிரிப்டோவில் அடிக்கடி முதலீடு செய்து அதிக அளவு வர்த்தகம் செய்து குறிப்பிடத்தக்க லாபத்துடன் இருந்தால், கிரிப்டோகரன்சிகளின் லாபம் வணிக வருமானமாக வரி விதிக்கப்படும். கிரிப்டோவின் வரிவிதிப்பு ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் வித்தியாசமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், மேலும் அவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு முன் நிபுணர் ஆலோசனையைப் பெற வேண்டும்.

ஒரு தனிநபர் கிரிப்டோகரன்சிகளில் நீண்ட கால ஆதாயங்களுக்காக முதலீடு செய்திருந்தால், கிரிப்டோ ஆதாயங்களிலிருந்து வரும் லாபங்களை, மூலதன ஆதாயங்கள் பிரிவின் கீழ் தாக்கல் செய்யலாம். பரிவர்த்தனையின் விற்பனை விலை செலவை விட அதிகமாக இருந்தால், அது மூலதன ஆதாயமாகக் கருதப்படும். மக்கள் இதற்கும் வரி செலுத்த வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக