Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

கிராமத்துக்கும்... நகரத்துக்கும் இதுதாங்க வித்தியாசம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------------------
கொஞ்சம் சிரிக்கலாமே..!!
--------------------------------------------------------------
போலீஸ்காரர் மகன் : (அங்கு ஒட்டப்பட்டிருக்கும் குற்றவாளிகளின் போட்டோக்களைப் பார்த்து) யாருப்பா இவங்களெல்லாம்?
போலீஸ் : இவங்களெல்லாம் தேடப்பட்டு வரும் குற்றவாளிடா. இவங்களை நான் புடிச்சே ஆகணும்.
போலீஸ்காரர் மகன் : ஏன்? போட்டோ எடுக்கும்போதே நீங்க புடிச்சிருக்கலாமே? 
போலீஸ் : 😧😧
--------------------------------------------------------------
நீதிபதி : நீ தங்கத்தைக் கடத்தியது உண்மைதானா?
கைதி : ஆமாங்க.
நீதிபதி : எத்தனை கிலோ தங்கத்தை கடத்தினாய்?
கைதி : அவள் எடை எனக்குத் தெரியாதுங்க!
நீதிபதி : 😣😣
--------------------------------------------------------------
நிரூபர் : இந்தக் கல்யாண மண்டபம் ரொம்ப ராசியானதுன்னு சொல்றீங்களே எப்படி?
நடிகை : இங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா, ரெண்டே மாசத்துல விவாகரத்தும் கிடைச்சிடுது அதான்.
நிரூபர் : 😂😂
--------------------------------------------------------------
இது தான் கிராமமும்... நகரமும்...!!
--------------------------------------------------------------
🏡 வீட்டுக்கு வந்த விருந்தாளிகிட்ட போகும் போது
பாத்து பத்திரமா போயிட்டு வாங்கன்னு சொன்னா அது கிராமம்... 

🌆 அதுவே போறப்போ வெளிய கேட்ட சாத்திட்டு போங்கன்னு சொன்னா அது நகரம்..
--------------------------------------------------------------
கண்டுபிடியுங்கள்..!!
--------------------------------------------------------------
🙄 மூலையில் முடங்கிக் கிடப்பான், மூலைமுடுக்கெல்லாம் சுத்தம் செய்வான் அவன் யார்? 

🙄 கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான் அவன் யார்?

🙄 இரைச்சலோடு செல்லும் விமானமும் அல்ல, இடியோசை தரும் வானமும் அல்ல அவன் யார்?

🙄 நோயில்லாமல் இளைப்பான், உணவின்றி பருப்பான் அவன் யார்?

🙄 வெள்ளைப் பிள்ளையார் கோவிலுக்கு, பூட்டும் இல்லை திறப்பும் இல்லை அவன் யார்?

விடை : 

💥 துடைப்பம்.
🍙 உளுத்தம் பருப்பு.
🎆 வான வெடி
🌾 கரும்பு
🍳 முட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக