Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 24 பிப்ரவரி, 2022

அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில் வடவள்ளி கோயம்புத்தூர்

Temple : Temple Details | - | Tamilnadu Temple | மாகாளி அம்மன்

இந்த கோயில் எங்கு உள்ளது?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி என்னும் ஊரில் அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
 
வடவள்ளியிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் தான் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதியும் உள்ளது மற்றும் மினி பேருந்துகளிலும் செல்லலாம்.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

அரச மரத்தடியில் பிள்ளையார் சிலை உள்ளது. அதன் முன்பு மூஞ்சுறு மற்றும் நந்தி வாகனங்கள் ஒரே இடத்தில் இருப்பதும், சித்திரை மாதத்தில் ஒரு நாள் மட்டும் சூரியனின் ஒளி அம்மன் மீது படுவதும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.

அம்மனுக்கு புதியதாக கருவறை, அர்த்த மண்டபம் கல்திருப்பணியாகவும், விமானம், முன்மண்டபம், விநாயகர், முருகன், கருப்பராயன், கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் சிறப்புமிக்கவையாக விளங்குகின்றன.

வேறென்ன சிறப்பு?

கிழக்கு திசை நோக்கியுள்ள கோயிலின் உள்ளே சென்றதும் மாகாளி அம்மன், மேற்கு பார்த்த சிம்ம வாகனம் ஆகியவை அமைந்துள்ளது.

கோயிலின் முகப்பில் தலவிருட்சமாக வேப்பமரம் அமைந்துள்ளது.

கோயிலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு வாசல் இருக்கிறது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

சித்திரை திருவிழா, வைகாசி விசாகம், பொங்கல் விழா ஆகியவை இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.
 
5 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

நோய் நொடி நீங்க, திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற இக்கோயிலில் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

தொழிலில் நினைத்த காரியங்கள் நிறைவேறவும் இக்கோயிலின் அம்மனை பிரார்த்திக்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

மாங்கல்ய காணிக்கை மற்றும் பூச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக