Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 23 பிப்ரவரி, 2022

ஆப்பிள் நிறுவனத்தையே திரும்பி பார்க்க வைத்த ஒரு சிறுவன்.! அப்படி என்ன செய்தார்?

தற்போது பல தொழில்நுட்ப

புதிய தொழில்நுட்பங்களுக்கு எப்போதுமே உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்குவோர் குறைந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய அளவில் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர். 

அதன்படி தற்போது பல தொழில்நுட்ப நிறுவனங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஒரு இந்திய இளைஞர். அதாவது 17 வயது சிறுவன் மொபைல், வெப்சைட் உருவாக்குவதன் மூலம் மில்லியன் டாலரை சம்பாதித்து இப்போது பில்லியன் டாலர் அளவில் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளார்.

டெல்லியை சேர்ந்த இவான் சிங் லூத்ரா 12 வயதாக இருக்கும் போது தனது தந்தையின் கால் சென்டரில் கம்ப்யூட்டர் கோடிங் கற்றுக் கொண்டார். அதன்பின்பு 15 வயதுக்குள் மொபைல் ஆப், வெப்சைட் போன்றவற்றை சொந்தமாக உருவாக்கி விற்பனை செய்யத் துவங்கினார் சிங் லூத்ரா.

குறிப்பாக இவான் சிங் லூத்ராவின் ஆப்களை இந்தியாவில் லட்சக்கணக்கான பயனர்கள் பயன்படுத்த துவங்கினர். மேலும் இந்தியாவை தாண்டி வெளிநாட்டில் இருக்கும் மக்களும் பயன்படுத்த துவங்கியதால் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸின் தொடர்பு லூத்ராவுக்கு கிடைத்தது.

குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் சாதனங்களை அறிமுகம் செய்த காலத்தில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் குறித்து ஆலோசனை பெற உலகம் முழுவதிலும் இருந்து முக்கியமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் இவான் சிங் லூத்ராவும் ஒருவர் ஆவார்.

வெளிவந்த தகவலின்படி அடிப்படையில், 15 வயதில் ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் நேரடியாக விவாதம் செய்து பல அறிவுரைகள் ஆப்பிள் ஆப் ஸ்டோர்-க்காக வழங்கியுள்ளார் இவான் சிங் லூத்ரா. பின்பு ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களிடம், ஓரு மொபைல் ஆப் வசதி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை பெற்றுள்ளதாக இவான் சிங் லூத்ரா இன்றும் பெருமையுடன் கூறுகிறார்.

சரியாக இரண்டு வருடத்திற்கு பிறகு பெரிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்த காரணத்தால் தான் உருவாக்கிய 30 மொபைல் ஆப்களையும், பல மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் 17 வயதில் மில்லியனர் ஆனார் லூத்ரா.மேலும் 17 வயதில் பெற்ற பணத்தையும் அனுபவத்தையும் பல வகையில் பயன்படுத்தி இப்போது 300-க்கும் அதிகமான
நிறுவனத்தை உருவாக்கி, முதலீடு செய்துள்ளார் இவான் சிங் லூத்ரா.

தற்போது 27 வயதாகும் இவான் சிங் லூத்ரா 30 வயதில் பில்லியனர் என்ற நிலையை அடைவேன் எனத் தெரிவித்துள்ளார். குறிப்பக
யூடியூப் மூலம் கம்ப்யூட்டர் கோடிங் கற்றுக்கொண்டு 17 வயதில் மில்லியனரான இவான் சிங் லூத்ரா தற்போது கப்பலில் பார்டி, ஆடம்பர சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அதேபோல் விரைவில் இவர் ஹெலிகாப்டர் வாங்க உள்ளதாக தகவல்வெளிவந்துள்ளது..

இந்தியா, மெக்ஸிகோ, டொமினிகன் குடியரசு மற்றும் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய பகுதிகளில் மாறி மாறி வசித்து வருகிறார் இவான் சிங் லூத்ரா. அதேபோல் இவர் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தாலும் தற்போது தொழில்நுட்பங் வளர்ச்சிமூலம்ஆடம்பரமான வாழக்கையை வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக