Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 23 பிப்ரவரி, 2022

குறட்டையால் இரவு தூக்கம் பாதிக்கப்படுகிறதா..? உடனே சரி செய்ய உதவும் வீட்டுக்குறிப்புகள்..!

 குறட்டை விடுவது ஏன்? | குறட்டை விடுவது ஏன்? - hindutamil.in

நாள் முழுக்க உழைத்து கொண்டிருப்பவர்கள், இரவில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், இந்த தூக்கத்தை கெடுக்கும் முக்கிய காரணியாக இருப்பது மற்றவர்களின் குறட்டை சத்தம். பொதுவாக ஒருவருக்கு குறட்டை விடும் பிரச்சனை இருந்தால் அவரின் அருகில் படுத்து உறங்குவதற்கு பலர் தயங்குவார்கள். அவரால் தனது தூக்கம் கேட்டு போய்விடும் என்பதற்காக குறட்டை விடும் நபரின் அருகில் தூங்க மாட்டார்கள்.

மற்றவர்களின் எரிச்சல் ஒருபுறம் இருக்க, இந்த பிரச்சனை பல உடல் நலக்குறைவுக்கான அறிகுறியாக உள்ளது. குறட்டை, சுவாச பிரச்சனைகளுடன் இணைந்தால், இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இது தூக்கத்தில் மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கும் மற்றும் சுவாச சார்ந்த பாதிப்புகளையும் தரும். இந்த குறட்டை பிரச்சனையை சரிசெய்ய சில வீட்டு வைத்தியங்கள் உள்ளது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சோயா பால் : குறட்டை பிரச்சனை உள்ளவர்கள் பசும்பாலை குடிப்பதற்கு பதிலாக சோயா பாலுக்கு மாறுவது சிறந்தது. பால் பொருட்கள் சளியை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. பசும்பாலில் இருக்கும் சில புரோட்டீன்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது தூக்கம் சார்ந்த பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். மேலும் இதனால் நாசிப் பாதையை மூடி, குறட்டையை அதிகரிக்கும்.

இஞ்சியும் தேனும் : இஞ்சி மற்றும் தேன் கலவையானது பல பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வுகளை தர கூடியவை. இது உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து, தொண்டையை மிருதுவாக்கி, குறட்டையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. எனவே தினமும் சிறிதளவு இஞ்சியும் தேனும் கலந்து சாப்பிட்டு வரலாம்.

பழங்கள் : உடலில் மெலடோனின் அளவை அதிகரிப்பதன் மூலம் குறட்டை பிரச்சனையை பெருமளவு குறைக்கலாம். மெலடோனின் ஹார்மோன் தூக்கத்தை சீராக்க செயல்படுகிறது. அன்னாசி, வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களில் அதிக அளவு மெலடோனின் உள்ளது. இவற்றை சாப்பிட்டு வருவதால் உடலில் மெலடோனின் அளவு அதிகரிக்கும். மேலும் பூண்டு, வெங்காயம் மற்றும் குதிரைவாலி ஆகிய உணவுப் பொருட்களை உட்கொள்வது தொண்டை பகுதியில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.

ஆலிவ் ஆயில் : இரவும் தூங்கும் முன் அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் கலந்து சாப்பிடுவது குறட்டை பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருக்கும். இது தொண்டையில் உள்ள அதிர்வுகளை குறைத்து குறட்டையை நிறுத்த உதவுகிறது. ஆலிவ் எண்ணெயில் வலுவான அழற்சி பண்புகள் உள்ளன. எனவே இது சுவாச பாதைகளில் உள்ள திசுக்களை எளிதாக்குகிறது மற்றும் வீக்கத்தையும் குறைக்கிறது.

நீராவி பிடித்தல் : ஆவி பிடித்தல் குறட்டையை குறைக்கும் சிறந்த வழியாகும். இது மூக்கடைப்பு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து குறட்டை விடுவதை நிறுத்த உதவும். மேலும் சுத்தமான வெண்ணெய் அல்லது நெய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தாலும் நாசிப் பாதைகளைத் திறந்து குறட்டையைக் குறைக்க வழி செய்யும்.

மேற்சொன்ன வழிமுறைகள் அனைத்தும் பொதுவானவை. எனவே இவற்றை பின்பற்றுவதற்கு முன்பாக உங்களின் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக