Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

அதிர்ச்சி சம்பவம்! இரு ஆண்டுகள் மாயமான சிறுமி; வீட்டு படிக்கட்டின் கீழ் கண்டுபிடிப்பு

 அதிர்ச்சி சம்பவம்! இரு ஆண்டுகள் மாயமான சிறுமி; வீட்டு படிக்கட்டின் கீழ் கண்டுபிடிப்பு

இரண்டு ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த சிறுமி, அவரது வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் உள்ள ரகசிய அறையில் கண்டுபிடிக்கப்பட்ட சமப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை தங்களிடம் இருக்க வேண்டும் என்ற பெற்றோர் கோரி வந்த நிலையில், அதற்கு அனுமதி கிடைக்காததால், தங்கள் நான்கு வயது சிறுமியை கடத்திச் சென்று இரண்டு ஆண்டுகளாக ஒரு ரகசிய மறைவிடத்தில் மறைத்து வைத்திருந்ததாக நம்பப்படுகிறது. பெண் குழந்தைக்கு இப்போது 6 வயது.

கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி காணாமல் போன நிலையில், இரண்டு வருடத்திற்கு பிறகு, சமீபத்தில், நியூயார்க்கின் ஹட்சனில் உள்ள அவரது வீட்டின் படிக்கட்டுகளின் கீழ் கட்டப்பட்ட ஒரு சிறப்பு அறையில், போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டார். குழந்தையின் உடல்நிலை சீராகவே உள்ளது என்றும் பாதிப்பு ஏதும் இல்லை எனவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். சிறுமியை அவளது பெற்றோரே கடத்திச் சென்றதாக நம்பப்படுகிறது. நியூயார்க் போலீஸார் இது குறித்து கூறுகையில், வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் கட்டப்பட்ட அறையில் இருந்து பைஸ்லி ஷுல்டிஸ் என்ற ஆறு வயது சிறுமி மீட்கப்பட்டதாகவும் பெண் குழந்தை பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளது.

பைஸ்லி  என்ற சிறுமியை யார் வளர்ப்பது என்ற சட்ட போராட்டத்தில், தங்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருக்கும் நிலையில், அவரது உயிரியல் பெற்றோரான கிம்பர்லி கூப்பர் மற்றும் கிர்க் ஷுல்டிஸ் ஆகியோர், குழந்தையை கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. குழந்தையை சட்டப்படி உரிமை கோருவதில் சிக்கல் இருந்த நிலையில்,  அவளது சட்டபூர்வ பாதுகாவலர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கிருந்து 2019ஆம் ஆண்டு பைய்ஸ்லி காணாமல் போனார். கடத்தலுக்குப் பிறகு, பெய்ஸ்லியை மற்றவர்கள் கண்ணில் படாமல் இருக்க, வீட்டின் மாடிப்படியில் கீழ் இருந்த மிகவும் சிறிய ரகசிய அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக நியூயார்க் போலீஸார் கூறுகின்றனர்.

சிறுமி குறித்த துப்பு கிடைத்த நிலையில் போலீஸார்  சோதனையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். வீட்டில் சோதனை செய்த போது படிக்கட்டில் இருந்த மரக்கட்டைகளை அகற்றி பார்த்த போது சிறுமியின் பாதங்கள் தெரிந்தது. இதையடுத்து சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டார். இந்நிலையில், சிறுமியின் பெற்றோர், சம்பந்தப்பட்ட வேறு சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை அவரது சட்டப்பூர்வ பாதுகாவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக