Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 17 பிப்ரவரி, 2022

இதுல போறதுக்கு தைரியம் வேணும்! சிகப்பு கண் விமானம்னா என்னனு தெரியுமா? இதுவரைக்கும் கேள்விப்படாத விஷயமா இருக்கே

தூக்கமே வராது... 'சிகப்பு கண் விமானம்' அப்படினா என்னனு தெரியுமா? இதுவரைக்கும் கேள்விப்படாத விஷயமா இருக்கே!

சிகப்பு கண் விமானங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்கள் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான மற்றும் பலருக்கும் தெரியாத தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இந்த வரிசையில் இன்று ஒரு முக்கியமான தகவலை நாம் பார்க்க போகிறோம். 'சிகப்பு கண் விமானங்கள்' என்றால் என்ன? என்பது பற்றியும், அது தொடர்பான கூடுதல் தகவல்களையும்தான் இன்று நாங்கள் உங்களுக்கு சொல்ல போகிறோம்.

'Red Eye Flights' என்பதுதான் தமிழில் 'சிகப்பு கண் விமானங்கள்' என குறிப்பிடப்படுகிறது. விமான போக்குவரத்து உலகில் இது அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பதம் ஆகும். ஆனால் சிகப்பு கண் விமானங்கள் பற்றி சாமானியர்களுக்கு எதுவும் தெரியாது. விமானங்களில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு கூட இது பற்றி தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.

ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். சிகப்பு கண் விமானங்கள் பற்றிய விரிவான தகவல்களை நாங்கள் இந்த செய்தியில் உங்களுக்கு தெரிவித்து விடுகிறோம். சிகப்பு கண் விமானங்களில் பயணம் செய்வதற்கு நீங்கள் எப்படி தயாராக வேண்டும்? என்பதையும், இந்த செய்தியில் நாங்கள் விரிவாக விளக்கி கூறியுள்ளோம்.

சிகப்பு கண் விமானங்கள் என்பது ஒரு வகையான விமானங்கள் ஆகும். பொதுவாக சிகப்பு கண் விமானங்கள் மாலை அல்லது இரவு நேரத்தில் புறப்படும். சென்று நேர வேண்டிய இடத்தை இந்த விமானங்கள் மறுநாள் காலை அடையும். இப்படி மாலை அல்லது இரவில் புறப்பட்டு சேரும் இடத்தை காலையில் சென்றடையும் விமானங்களைதான் சிகப்பு கண் விமானங்கள் என அழைக்கின்றனர்.

பொதுவாக நீங்கள் தூங்க வேண்டிய நேரத்தில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தால், அதாவது இரவு நேரங்களில் விமானத்தில் பயணம் செய்தால், அதனை சிகப்பு கண் விமானம் என்று அழைக்கலாம். பெரும்பாலான சிகப்பு கண் விமானங்கள் இரவு 9 மணிக்கு பிறகுதான் புறப்படும். சேர வேண்டிய நாடு/நகரத்தை மறுநாள் காலை 5 அல்லது 6 மணியளவில் இந்த விமானங்கள் சென்றடையும்.

இந்த விமானங்களை சிகப்பு கண் விமானங்கள் என்று அழைப்பதற்கு காரணம் உள்ளது. பொதுவாக விமான பயணத்தின்போது அனைவராலும் சௌகரியமாக தூங்கி விட முடியாது. விமான பயணத்தின்போது நன்றாக தூங்குபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. அதுவும் இரவு நேர விமான பயணங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

இரவு நேரங்களில் விமானத்தில் பயணம் செய்யும்போது தூக்கம் வராமல் நிறைய பேர் தவிப்பார்கள். இதன் காரணமாக மறுநாள் காலை விமானத்தை விட்டு கீழே இறங்கும்போது, அவர்களின் கண்கள் நன்கு சிவந்து போய் இருக்கும். எனவேதான் இரவு நேரங்களில் புறப்பட்டு மறுநாள் காலை இலக்கை அடையும் விமானங்களை சிகப்பு கண் விமானங்கள் என்று அழைக்கின்றனர்.

சிகப்பு கண் விமானங்களில் பயணிக்கும்போது நீங்கள் தூக்கம் வராமல் தவிக்கும் சூழல் ஏற்படலாம். ஆனால் ஒரு சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் சௌகரிமான பயணத்தை உறுதி செய்து கொள்ள முடியும். இதற்கு முதலில் நீங்கள் வெதுவெதுப்பான மற்றும் சௌகரியமான உடைகளை அணிவது மிகவும் அவசியமானது.

சிகப்பு கண் விமானங்களில் பயணம் செய்யும்போது அழகாக தோற்றமளிக்கும் உடைகளை அணிவதை விட சௌகரியமான உடைகளை அணிவதுதான் சிறந்தது. அதேபோல் கூடுதல் போர்வையை கொண்டு செல்வது பற்றியும் நீங்கள் பரிசீலனை செய்யலாம். அனைத்து சிகப்பு கண் விமானங்களிலும் போர்வையும், தலையணையும் வழங்கப்படுவதில்லை.

ஒரு சில சிகப்பு கண் விமானங்களில் மட்டுமே அவை வழங்கப்படுகின்றன. எனவே நீங்கள் பயணம் செய்யும் விமானத்தை பொறுத்து, அதற்கு ஏற்ப முன்கூட்டியே தயாராகி விடுங்கள். ஒரு சில விமானங்களில் போர்வை மற்றும் தலையணை வழங்கினாலும் கூட, பெரும்பாலும் அவை மெல்லியதாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே உங்களுக்கு சௌகரியமான பயணம் வேண்டுமென்றால், கூடுதல் போர்வை மற்றும் தலையணையை கொண்டு செல்வது பற்றி பரிசீலனை செய்யலாம். அதேபோல் விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பாக மது அருந்துவதையும் தவிர்த்து விடுங்கள். மது அருந்துவது பல்வேறு விதமான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதுடன், தூக்கத்தையும் கெடுத்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக