கணவனின் கேள்வியும்... மனைவியின் பதிலும்...!!
கணவன் எதிர்பார்ப்பது என்ன? (சிரிக்க மட்டுமே)
கணவன் : எப்போதும் சிரித்த முகம்.
மனைவி : எப்போதும் சிரிப்பதற்கு நாங்கள் என்ன காமெடி பீஸ்ஸா?
கணவன் : மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
மனைவி : அவர்கள் எங்களை மகளாக நினைப்பதில்லையே!
கணவன் : காலையில் முன் எழுந்திருத்தல்.
மனைவி : இப்போ மட்டும் என்ன நீங்களா எழுந்திருக்கிறீங்க?
கணவன் : கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
மனைவி : அப்போ எங்க குடும்பத்தாரோடு நீங்கள் அனுசரிக்க தயாரா?
கணவன் : எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக்கூடாது.
மனைவி : குறை சொல்ற மாதிரி ஏன் நடந்துக்குறீங்க?
கணவன் : குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
மனைவி : பார்றா... பெரிய மாயாண்டி குடும்பத்தார், பிரிக்கிறோமாம்! அப்போ எங்களையும் அம்மா வீட்டில் இருந்து பிரிக்கக்கூடாது சொல்லிட்டேன்!
கணவன் : கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
மனைவி : எவ்ளோ நாளைக்கு தான் அன்பாவே சொல்றது, அதிரடி தான் வேலைக்கு ஆகும்!
கணவன் : கணவனை சந்தேகப்படக்கூடாது.
மனைவி : ஹி.. ஹி.. ஹி.. அப்போ போன் கால் வந்தா வெளியே போய் தனியா பேசக்கூடாது!
கணவன் : பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
மனைவி : நீங்களும் நண்பரோடு வெளியே சுத்துவதை குறைக்கணும்!
கணவன் : இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
மனைவி : என்ன இருக்கு திருப்தி அடைய?
கணவன் : அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
மனைவி : ஏன் அதற்கு மேல் சம்பாதிக்க முடியாதா?
கணவன் : தேவைகளை முன்கூட்டியே சொல்ல வேண்டும்.
மனைவி : எப்போ ஒரு வருஷத்துக்கு முன்னாடியே வா?
கணவன் : எதிர்காலத் திட்டங்களை சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
மனைவி : ஓ... எதிர்கால திட்டம் கூட இருக்கா! சொல்லவே இல்லை!
கணவன் : தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
மனைவி : உண்மையை சொன்னால் ஏன் மறுக்கணும்?
கணவன் : சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
மனைவி : அதுக்கு ஹோட்டல்-ல போய் சாப்பிடுங்க!
கணவன் : பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மனைவி : ஏன் உங்களுக்கு இல்லைன்னா?
கணவன் : தேவையற்றதை வாங்கி பணத்தை செலவு செய்யக்கூடாது.
மனைவி : முதலில் தம்மு, தண்ணி இதை நீங்கள் விடுங்கள்!
கணவன் : உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
மனைவி : ஆமா இவங்க பெரிய 6 pயஉம வெச்சிருக்காங்க பாரு. முதலில் தொந்தியை குறைங்க பா!
கணவன் : 😣😧😩
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக