கொரோனா காலத்தில் பல தடைகளைத் தாண்டி கடுமையாக உழைத்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிய ஊழியர்களுக்கு நன்றி கூறும் வகையில் உலகளவில் பல நிறுவனங்கள் பல விதத்தில் பல விஷயங்களைச் செய்து வருகிறது. குறிப்பாகக் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்குப் பணமாகவே கொடுத்துள்ளனர், இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்களுக்குப் பல்வேறு பரிசுகளைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு வேலைவாய்ப்பு சேவை நிறுவனம் தனது நிறுவனத்தில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் பாரீன் டூர் அழைத்துச் சென்றுள்ளது.
பிரிட்டன் நிறுவனம்
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த யோக் என்னும் வேலைவாய்ப்பு சேவை நிறுவனம் கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அனைத்து ஊழியர்களையும் ஸ்பெயினின் மிகப்பெரிய கேனரி தீவுகளில் ஒன்றான டெனெரிஃப்-க்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளது.
2021ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், யோக் நிறுவனம் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து ஊழியர்களையும் டெனெரிஃப் தீவுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளது. அனைவரும் வெற்றி பெறும் கலாச்சாரத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்!
இதனாலேயே அனைத்து ஊழியர்களையும் இந்த 100 சதவீத இலவச சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம் என யோக் நிறுவனம் தனது லின்கிடுஇன் தளத்தில் தெரிவித்துள்ளது.
முதல் நிறுவனம்கார்டீப் பகுதியில் இருக்கும் நிறுவனங்களில் முதல் முறையாக ஒரு நிறுவனம் அனைத்து ஊழியர்களையும் இலவசமாகச் சுற்றுலா அழைத்துச் செல்லும் முதல் நிறுவனமாக யோக் நிறுவனம் திகழ்கிறது எனவும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
1 கோடி ரூபாய்55 ஊழியர்கள் செல்லும் இந்தச் சுற்றுலாவுக்காக யோக் நிறுவனம் சுமார் 1,00,000 பவுண்டு அதாவது 1 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்ய உள்ளது. மேலும் இது கடந்த 2 வருடம் ஊழியர்களின் கடுமையான உழைப்பிற்கான நன்றி தான் என யோக் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியான பவன் அரோரா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக