Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 23 பிப்ரவரி, 2022

ஒலியை விட அதிக வேகத்தில் பயணிக்கும் கார் விற்பனைக்கு... என்ன ஒலியைவிட வேகமா!.. அப்படி என்ன வேகத்துல போகும்?

பேசின வார்த்தை மத்தவங்க காதுல போய் விழுறதுகுள்ள இந்த கார் போய் சேந்திரும்... ஒலியை விட அதிக வேகத்தில் பயணிக்கும் கார் விற்பனைக்கு!

ஒலியைவிட மிக அதிக வேகத்தில் செல்லக் கூடிய கார் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாம் அனைவரும் மிக வேகத்தில் ராக்கெட் மட்டுமே செல்லும் என நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அதன் வேகத்தையே மிஞ்சக் கூடிய வாகனங்கள் சில நம் உலகில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி, மிக அதி-வேக திறனுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் ஓர் கார் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பிளட்ஹவுண்ட் எஸ்எஸ்சி (Bloodhound SSC), இதுவே ராக்கெட்டின் பவர் கொண்ட காராகும். பன்முக நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதுவே தற்போது விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு சுமார் 11 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் தோராயமாக 82 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கு இது விற்பனைக்கு வந்திருக்கின்றது. சுவாரஷ்யமாக இந்த கார் மணிக்கு ஆயிரம் மைல் எனும் மிக உச்சபட்ச வேகத்தில் செல்லக் கூடியது. அதாவது, மணிக்கு 1,609 கிமீ வேகம் செல்லுமாம். இத்தகைய நினைத்துகூட பார்க்க முடியாத வேகத்தில் செல்லக் கூடியதாகவே பிளட்ஹவுண்ட் எஸ்எஸ்சி கார் காட்சியளிக்கின்றது.

இந்த அதீத வேகத்திற்காக ஜெட் எஞ்ஜின் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுவே, ஒலியை விட மிக அதிக வேகத்தில் காரை இயங்க செய்கின்றது. இந்த கார் இன்னும் பல்வேறு சுவாரஷ்யங்களை அடக்கியதாகக் காட்சியளிக்கின்றது. அவற்றை ஒவ்வொரு பாயிண்டாக பார்க்கலாம்.

ஆய்வுகள்:

தற்போது உற்பத்தியாளர்கள் இந்த காரை ஆய்விற்கு உட்படுத்தி வருகின்றனர். தெற்கு ஆப்பிரிக்காவின் வடக்கு கேபே மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் வைத்தே இக்கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இங்கு காரின் பிரேக்கிங் மற்றும் வேகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது கார் மணிக்கு 501 மைல் (806 கிமீ) வேகம் வரை உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

எஞ்ஜின்:

இந்த புதிய மின்னல் வேக காரில் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனத்தின் இஜே200 டர்போஃபேன் ஜெட் (EJ200 turbofan jet) எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜினே யூரோஃபைட்டர் டைஃபூன் (Eurofighter Typhoon) ஏர்கிராஃப்டிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுதவிர கூடுதலாக ராக்கெட் த்ரஸ்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவை மட்டுமின்றி, இக்காரின் உருவமும் அதி-வேகத்திற்கு ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. மிக சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தோற்றம் பிளட்ஹவுண்ட் எஸ்எஸ்சி காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. காற்றினால் ஏற்படும் அழுத்தம், காற்றை கிழித்துக் கொண்டு செல்லும் வசதி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

பேசின வார்த்தை மத்தவங்க காதுல போய் விழுறதுகுள்ள இந்த கார் போய் சேந்திரும்... ஒலியை விட அதிக வேகத்தில் பயணிக்கும் கார் விற்பனைக்கு!

முந்தைய சாதனை:

முன்னதாக 1997ம் ஆண்டில் ஆண்டி கிரீன் என்பவர் மணிக்கு 763 மைல் வேகத்தில் காரை இயக்கி உலக சாதனைப் படைத்திருந்தார். இந்த சாதனையையே விரைவில் பிளட்ஹவுண்ட் எஸ்எஸ்சி முறியடிக்க இருக்கின்றது. சுவாரஷ்யமாக இந்த சாதனையையும் ஆண்டி கிரீனே செய்ய இருக்கின்றார்.

நிறுத்தம்:

பிளட்ஹவுண்ட் எஸ்எஸ்சி வழக்கமான கார்களில் இருந்து பல மடங்கு மாறுபட்டதாகக் காட்சியளிக்கின்றது. இந்த காருக்கான எரிபொருளும் மாறுபட்டுக் காணப்படுகின்றது. இதேபோல் இந்த காரில் 80L உயர் டெஸ்ட் பெராக்சைடை வழங்கக் கூடிய ஆக்ஸிலரி பவர் யூனிட் வழங்கப்பட்டிருக்கின்றது. இது காரில் இருக்கும் ராக்கெட் ஆக்சிடைசரை இயக்க உதவுகின்றது.

பேசின வார்த்தை மத்தவங்க காதுல போய் விழுறதுகுள்ள இந்த கார் போய் சேந்திரும்... ஒலியை விட அதிக வேகத்தில் பயணிக்கும் கார் விற்பனைக்கு!

பிளட்ஹவுண்ட் எஸ்எஸ்சி இது ஓர் முழுமையான கண்டுபிடிப்பாக காட்சியளிக்கின்றது. மிக சிறந்த தொழில்நுட்பம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த பொறியியல் என பல சிறப்புகள் இந்த மின்னல் வேகக் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக