Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 24 பிப்ரவரி, 2022

சேத்து வச்ச ஒட்டுமொத்த காசையும் ஸ்கூட்டருக்காக வாரிபோட்டு வந்த காய்கறி வியாபாரி... ஷோரூமே ஆடி போயிருச்சு!

இதுக்கு முன்னாடி யாருமே இதுபோல பேமெண்ட் செஞ்சிருக்க மாட்டாங்க... நாணய மூட்டைகளுடன் ஷோரூம் வந்த காய்கறி வியாபாரி!

காய்-கறி வியாபாரி ஒருவர் தான் சேர்த்து வைத்த ஒட்டுமொத்த நாணயங்களையும் பயன்படுத்தி சுசுகி அவெனிஸ் (Suzuki Avenis) ஸ்கூட்டரை வாங்கியிருக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் விலை மற்றும் அதன் சிறப்பம்சங்கள் பற்றிய முக்கிய விபரங்களை கீழே காணலாம், வாங்க.

சுசுகி (Suzuki) நிறுவனத்தின் புதுமுக ஸ்கூட்டர் மாடலாக அவெனிஸ் (Avenis) இருக்கின்றது. இது, இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் தற்போது பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றது. இந்த ஸ்கூட்டரையே ஓர் நபர் விநோத முறையில் வாங்கியிருக்கின்றார். பத்து, ஐந்து, இரண்டு மற்றும் ஒரு ரூபாய் நாணயங்களைக் கொண்டு அவர் வாங்கியிருக்கின்றார்.

இதுக்கு முன்னாடி யாருமே இதுபோல பேமெண்ட் செஞ்சிருக்க மாட்டாங்க... நாணய மூட்டைகளுடன் ஷோரூம் வந்த காய்கறி வியாபாரி!

யுட்யூப் வாசிகள் சிலர் இதுபோன்று நாணயங்களைப் பயன்படுத்தி பெட்ரோல் போடுவது போன்ற செயல்களை இதற்கு முன்னதாக நாம் பார்த்திருப்போம். ஆனால், நாணயங்களைப் பயன்படுத்தி இருசக்கர வாகனம் வாங்குவது இதுவே முதல் முறையாகும். அசாம் மாநிலத்திலேயே இந்த சுவாரஷ்ய சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

இதுக்கு முன்னாடி யாருமே இதுபோல பேமெண்ட் செஞ்சிருக்க மாட்டாங்க... நாணய மூட்டைகளுடன் ஷோரூம் வந்த காய்கறி வியாபாரி!

காய்-கறி வியாபாரி ஒருவர் டவுண்பேமெண்ட் செய்வதற்காக தான் சிறுக சிறுக சேமித்து வைத்த சில்லறைகளை மூட்டைக் கட்டிக் கொண்டு வந்திருக்கின்றார். இதனை எந்த வித தயக்கமும் இன்றி ஷோரூம் ஊழியர்கள் ஏற்றுக் கொண்டு அவெனிஸ் ஸ்கூட்டரை வியாபாரிக்கு கொடுத்திருக்கின்றனர்.

இதுக்கு முன்னாடி யாருமே இதுபோல பேமெண்ட் செஞ்சிருக்க மாட்டாங்க... நாணய மூட்டைகளுடன் ஷோரூம் வந்த காய்கறி வியாபாரி!

ரூ. 22 ஆயிரம் சில்லறையாக வியாபாரி வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்பதற்காகவே கடந்த ஓராண்டாக இவர் இந்த தொகையைச் சேர்த்து வைத்திருக்கின்றார். ஒட்டுமொத்தமாக நாணயங்களை எண்ணி முடிக்க மூன்று மணி நேரங்கள் எடுத்துக் கொண்டதாக ஷோரூம் வட்டாரம் தகவல் தெரிவித்திருக்கின்றது. மீதமுள்ள தொகையை காய்-கறி வியாபாரி ஃபானான்ஸ் வாயிலாக செலுத்த இருக்கின்றார்.

இதுக்கு முன்னாடி யாருமே இதுபோல பேமெண்ட் செஞ்சிருக்க மாட்டாங்க... நாணய மூட்டைகளுடன் ஷோரூம் வந்த காய்கறி வியாபாரி!

சுசுகி நிறுவனத்தின்கீழ் மூன்று ஸ்கூட்டர்கள் விற்பனையில் இருக்கின்றன. அக்செஸ் 125, பர்க்மேன் மற்றும் அவெனிஸ் ஆகியவையே அவை ஆகும். தரத்தில், பர்க்மேன் மற்றும் அக்செஸ் 125 ஆகிய இரண்டிற்கும் இடையில் அவெனிஸ் அமர்ந்துள்ளது. இரு விதமான வேரியண்டுகளில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதுக்கு முன்னாடி யாருமே இதுபோல பேமெண்ட் செஞ்சிருக்க மாட்டாங்க... நாணய மூட்டைகளுடன் ஷோரூம் வந்த காய்கறி வியாபாரி!

கன்னெக்ட் எடிசன் மற்றும் ரேஸ் எடிசன் என இரு விதமான தேர்வுகளிலேயே ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், கன்னெக்ட் எடிசன் ரூ. 86,700 என்ற விலையிலும், ரேஸ் எடிசன் ரூ. 87 ஆயிரம் என்ற விலையிலும் விற்பனைச் செய்யப்படுகின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

இதுக்கு முன்னாடி யாருமே இதுபோல பேமெண்ட் செஞ்சிருக்க மாட்டாங்க... நாணய மூட்டைகளுடன் ஷோரூம் வந்த காய்கறி வியாபாரி!

நிறங்கள்:

ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் அவெனிஸ் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மெட்டாலிக் மேட் பிளாக் (Metallic Matte Black), மெட்டாலிக் மேட் ஃபிப்ரோயின் கிரே (Metallic Matte Fibroin Grey), பியர்ல் மிராஜ் ஒயிட் (Pearl Mirage White) மற்றும் பியர்ல் பிளேஸ் ஆரஞ்சு (Pearl Blaze Orange) ஆகிய நிற தேர்வுகளிலேயே ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், ரேஸ் எடிசனில் மட்டும் மெட்டாலிக் ட்ரிடன் ப்ளூ பெயிண்ட் (Metallic Triton Blue) தேர்வு வழங்கப்பட்டு வருகின்றது.

இதுக்கு முன்னாடி யாருமே இதுபோல பேமெண்ட் செஞ்சிருக்க மாட்டாங்க... நாணய மூட்டைகளுடன் ஷோரூம் வந்த காய்கறி வியாபாரி!

எஞ்ஜின்:

அக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஆகிய ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 124 சிசி எஞ்ஜினே அவெனிஸிலும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.7 பிஎஸ் மற்றும் 10 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது.

இதுக்கு முன்னாடி யாருமே இதுபோல பேமெண்ட் செஞ்சிருக்க மாட்டாங்க... நாணய மூட்டைகளுடன் ஷோரூம் வந்த காய்கறி வியாபாரி!

சிறப்பம்சங்கள்:

அவெனிஸ் ஸ்கூட்டரில் பன்முக சிறப்பங்களை சுசுகி வழங்குகின்றது. அவற்றில் முக்கியமானவையாக யுஎஸ்பி செல்போன் சார்ஜிங் போர்ட், முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டேக்கோமீட்டர், ஸ்பீடோ மீட்டர், ஃப்யூவல் கேஜ் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதி உள்ளிட்டவை இருக்கின்றன. ப்ளூடூத் இணைப்பு வசதியின் வாயிலாக கால் அலெர்ட், எஸ்எம்எஸ் அலர்ட் மற்றும் பேட்டரி இன்டிகேட்டர் உள்ளிட்ட தகவல்களைப் பெற முடியும்.

இதுக்கு முன்னாடி யாருமே இதுபோல பேமெண்ட் செஞ்சிருக்க மாட்டாங்க... நாணய மூட்டைகளுடன் ஷோரூம் வந்த காய்கறி வியாபாரி!

பிரேக் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு:

பிரேக்கிங் வசதிக்காக அவெனிஸ் ஸ்கூட்டரில் டிஸ்க் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இது முன் வீலுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பின் வீலில் டிரம் பிரேக் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், சிறந்த சஸ்பென்ஷனுக்காக டெலிஸ்கோபிக் முன் பக்கத்திலும், சிங்கிள் ரியர் ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக