Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 16 பிப்ரவரி, 2022

முட்டை கலக்கி செய்ய ஈஸியான ரெசிபி!


முட்டை கலக்கி 
ரோட்டு கடைகளிலும், நமது ஊர் புரோட்டா கடைகளிலும் கிடைக்கும் பிரபலமான சைடிஷ் ஆக “முட்டை கலக்கி” உள்ளது. ஹாஃப் ஆயில் போலவே சுருட்டி மடித்து இருக்கும் இந்த கலக்கிக்கு என தனி ரசிகர்களே உள்ளார்கள். 
 
தெரு கடைகளிலும், நமது ஊர் புரோட்டா கடைகளிலும் கிடைக்கும் பிரபலமான உணவாக முட்டை கலக்கி உள்ளது. ஹாஃப் ஆயில் போலவே சுருட்டி மடித்து இருக்கும். இந்த கலக்கியை எபடி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

முட்டை மிளகுத் தூள்

கொத்தமல்லித்தழை

உப்பு

செய்முறை:

முதலில் தோசைத் தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பிறகு, ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சிறிதளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். இதனை, தோசைத் தவாவில் ஊற்றி பரப்பவும். அதன், ஓரங்கள் வெந்ததும் நான்கு பக்கமும் மடித்துப் போடவும். முட்டை அரை வேக்காடாக இருக்க வேண்டும். இதனை ஒரு நிமிடம் திருப்பிப்போட்டு எடுக்கவும்.

இதன் மீது, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால் சுவையான முட்டை கலக்கி ரெடி. இந்த முட்டையை அடிக்கும்போது கூடவே சிக்கன் அல்லது மட்டன் கிரேவி ஊற்றி நன்றாக அடித்து கலக்கி செய்தால் சூப்பரான சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக