Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

WFH: நிரந்தரமாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதை இந்தியர்கள் விரும்புகிறார்கள்!

Work From Homeகடந்த 6 மாதங்களில், 32 லட்சம் வேலை தேடுபவர்கள் தற்காலிக அல்லது நிரந்தரமாக Work From Home வேலைகளையே தேடியுள்ளனர். 
 
ஒரு சில நிறுவனங்கள் அல்லது துறைகளுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் (Work From Home - WFH) விருப்பம், கோவிட் தாக்கத்தால் உலகம் முழுவதும் ஒரு புதிய வேலை மாடலாக உருவாகியது. பெரும்பாலான துறைகளில், ஐடி முதல் ஆன்லைன் கல்வி வரை இது ஓரளவுக்கு சாத்தியமாகி உள்ள நிலையில் வொர்க் ஃபிரம் ஹோம் மாடலே தொடருமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆனால், இந்தியாவில் வேலை தேடுபவர்கள் வொர்க் ஃபிரம் ஹோமையே விரும்புகிறார்கள் என்பதை கடந்த ஆறு மாத கால வேலைக்கான தேடல் முடிவுகள் காட்டுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு தளமான Naukri இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில், 32 லட்சம் வேலை தேடுபவர்கள் தற்காலிக (temporary) அல்லது நிரந்தரமாக வொர்க் ஃபிரம் ஹோம் வேலைகளையே தேடியுள்ளனர். இதில், 57% தேடல்கள் நிரந்தர ரிமோட் வேலைகளாக இருந்தன என்று Naukri தெரிவித்துள்ளது.

Naukri.com இல் ஜாப் சேர்ச் ஆப்ஷனில், தற்காலிக மற்றும் நிரந்தரமான ரிமோட் வேலைகள் என்ற ஒரு புதிய அம்சம் சேர்க்கபட்டது. அந்த விருப்பத்தின் கீழ் 93,000 வேலைகள் பட்டியலிடப்பட்டன. இந்த எண்ணிக்கையில், 22% நிரந்தரமாக வீட்டில் இருந்தபடியே பணியாற்றலாம் என்ற ஆப்ஷனை வழங்கின.

Naukri-ன் தலைமை வணிக அதிகாரியான பவன் கோயல் தெரிவிக்கையில், “நிறுவனங்களின் அதிகார அமைப்பு அடிப்படைகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பணிச்சூழல் எப்படி இருக்கும் என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், ரெக்ரூட்டர்ஸ்களைப் பொறுத்தவரை, திறமை எங்கிருந்தால் என்ன, வீட்டில் இருந்தபடியே வேலை செய்வது இரு தரப்புக்கும் பலன் அளிக்கும், அது மட்டுமின்றி கார்ப்பரேட் அளவில் மனித வலம் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சரில் நிரந்தரமான மாற்றங்களை எற்படுத்தலாம்” என்று தெரிவித்தார்.

சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் வழக்கமான வேலைகள், தற்காலிக வொர்க் ஃபிரம் ஹோம் வேலைகள் மற்றும் ரிமோட் வேலைகள் ஆகிய மூன்று வகைகளையும் வழங்குகின்றன. இருப்பினும், சில நிறுவனங்கள் எந்த வகையான வேலைகளை வழங்குவது என்ற குழப்பத்தில் இருக்கின்றன. நிறுவனங்கள் மிகவும் ஜாக்கிரதையாக தங்களின் பணிக்கான விருப்பங்களை தேர்வு செய்து வருகின்றன.

ஐடி நிறுவனங்கள், மென்பொருள் சேவைகள், ITeS மற்றும் ரெக்ரூட்டிங் துறைகள், ஆகிய துறைகளில் அதிக எண்ணிக்கையில் நிரந்தரமான ரிமோட் வேலைகளை வழங்குவதாக தரவுகள் காட்டுகின்றன. அமேசான், டெக் மஹிந்திரா, HCL, சீமென்ஸ், ஃபிளிப்கார்ட், ஆரக்கிள், சென்சார், TCS மற்றும் கேப்ஜெமினி போன்ற நிறுவனங்கள் தற்காலிக மற்றும் நிரந்தர ரிமோட் வேலைகளை வழங்குகின்றன.

உலகம் முழுவதும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டு, முடங்கிய நிலையில் பணியிடங்களில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெருமளவு பாதிப்பு ஏற்படாத நிலையில், வேலைவாய்ப்பு நிறுவனங்கள் வொர்க் ஃபிரம் ஹோம் விருப்பத்தை வழங்குகின்றன. முழுவதும் தொற்று பாதிப்பு நீங்காத நிலையில், குறிப்பிட்ட காலம் வரை ரிமோட் வேலைகளுக்கு குறைவிருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக