Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 16 மார்ச், 2022

இதே தேதியில் 31 வருடங்களுக்கு முன் வெளியான இந்த படம் தான் மோகனை சினிமாவை விட்டே துரத்தியது.


தமிழ் சினிமாவின் 80,90 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் மோகன். தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று பல முன்னடி நடிகர்கள் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு எல்லாம் செம்ம காம்படீசன் கொடுத்தவர் நடிகர் மோகன். 80களில் இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மோகன். இளையராஜாவின் உடைய சிறந்த பாடல்கள் எல்லாமே மோகனுக்கு அமைந்தது. இவர் முதன்முதலாக கன்னட மொழி மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். 1977ஆம் ஆண்டு பாலுமகேந்திரா தன்னுடைய முதல் படம் கோகிலாவை கன்னடத்தில் தான் எடுத்தார். அதில் தான் மோகன் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து மோகன் அவர்கள் கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தார். அதற்குப் பிறகு தான் மோகன் தமிழுக்கே வந்தார். 1987ஆம் ஆண்டு வெளியான மூடுபனி படத்தின் மூலம் மோகன் பிரபலமானார். பின் சேர்ந்து கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, விதி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். வருடத்திற்கு ஒரு படமாவது வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு மோகன் உடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இவருடைய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதோடு வருடம் வருடம் சூப்பர் சிறந்த நடிகர் விருதையும் இவர் தான் பெறுவார்.

மோகனின் திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பட்டைய கிளப்பி கொண்டு நடித்தார். இவரை எல்லோரும் மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள். ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேயே நேரத்தை செலவிட்டார். நடிகர் மோகன் கிட்டத்தட்ட 70 படங்களுக்குப் மேல் நடித்து தூள் கிளப்பியவர். நடிகர் மோகனின் நடித்து என்றாலே நிச்சயம் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு ஓடும் என்று எல்லோரும் பேசுவார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படம் எல்லாமே வித்தியாசமான கதை களம், சூப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.


மோகனின் திரைவாழ்க்கை மாற காரணம்:

 
மேலும், 80ஸ் காலகட்டங்களில் மோகன் வசூல் மன்னனாகவும், தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையும் ஆவார். கமலஹாசனுக்கு அடுத்த படியாக காதல் மன்னனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். சினிமா உலகில் முடி சூடா மன்னனாக எல்லா விதத்திலும் சிறந்து விளங்கிய நடிகர் மோகன் அவர்கள் ஒரு நடிகை அவரை பற்றி பொய்யாக சொன்ன வதந்தியால் அப்படியே அவருடைய வாழ்க்கை பாதையை மாறிவிட்டது என்று இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மோகன் திரைப்பயணத்தை அஸ்தமனமாகிய உருவம் படம் இன்றோடு வெளியாகி 31 வருடங்கள் ஆகி விட்டது.
உருவம் படம் பற்றிய தகவல்:

தற்போது இந்த படம் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வருடத்திற்கு ஒரு ஹிட்டாவது கொடுத்த மோகனின் திரைப்பயணத்தை 1991 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வந்த உருவம் படம் மாற்றியது. இதில் தனது அழகான முகத்தை அசிங்கப்படுத்தி மோகன் நடித்திருந்தார். அசிங்கப்படுத்தி என்றால் பார்க்கவே முடியாது அந்த அளவிற்கு அவருடைய முகம் மேக்கப் போட்டு கொடூரமாகக் இருக்கும். மோகனிடம் அவருடைய முகமும், புன்னகையும் தான் சிறப்பு. இரண்டுமே உருவத்தில் இல்லை. பார்க்கவே முடியாத கோரமான முகம். மேலும், இந்த ஒரே படத்தோடு அவரது திரைவாழ்க்கையில் காலியானது என்று சொல்லலாம். அதன் பிறகு எட்டு வருடங்கள் கழித்து மோகன் நடித்தார்.


ரீ-என்ட்ரி கொடுக்கும் மோகன்:

இருந்தாலும் வெற்றிவிழா நாயகனின் வாழ்க்கையை அஸ்தமனமாக உருவம் படம் அமைந்தது. அந்த படம் வெளியாகி இன்றுடன் முப்பத்தி ஒரு வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. மேலும், கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் மோகன் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘ஹரா’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படமாவது மோகனின் பழைய வாழ்க்கையை திரும்பி பார்க்க வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக