------------------------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்!!
------------------------------------------------------
கமல் : அது பணக்கார வீட்டு நாய் போலிருக்கு.
தமன் : எப்படி சொல்றீங்க?
கமல் : வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே.
தமன் : 😜😜
------------------------------------------------------
ஆசிரியர் : உனக்கு தமிழ் டீச்சரை பிடிக்குமா?... இங்கிலீஷ் டீச்சரை பிடிக்குமா?
மாணவன் : எனக்கு வீட்டுக்கு போக பெல் அடிக்கிற தாத்தாவைத்தான் பிடிக்கும்!
ஆசிரியர் : 😅😅
------------------------------------------------------
நோயாளி : நீங்க ஒரு பல் டாக்டரா?
டாக்டர் : இல்லை... முப்பத்திரெண்டு பல்லுக்கும் டாக்டர்....
நோயாளி : 😬😬
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
------------------------------------------------------
சரியான செயல்களை யாரும்
ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
தவறான செயல்களை யாரும் மறக்கவும் மாட்டார்கள்.
------------------------------------------------------
சிறந்த வரிகள் !!
------------------------------------------------------
நீங்கள் எப்போதும் ஓர்
அஞ்சல் தலையைப் போல் இருங்கள்.
நீங்கள் சென்று சேர வேண்டிய
இடத்தை சென்றடையும் வரை
அந்த ஒரு விஷயத்தோடு ஒட்டியே இருங்கள்.
வாழ்க்கை என்பது யுத்தம் போன்றது.
யுத்தத்தில் எவ்வாறு எதிரி இல்லாமல்
போரிட முடியாதோ... அவ்வாறே
வாழ்க்கையிலும் எதிரி தேவை...
எதை கண்டும் அச்சம் கொள்ளாமல்
துணிந்து எதிர் கொள்ளுங்கள்!
------------------------------------------------------
உங்கள் மூளைக்கு வேலை...!!
------------------------------------------------------
1. ஓர் குளிரான இரவில் நீங்கள் வீட்டினுள் நுழைகிறீர்கள். உங்களிடம் ஒரே ஒரு தீக்குச்சி மட்டுமே உள்ளது. வீட்டினுள் ஓர் விளக்கு, ஒரு மெழுகுவர்த்தி மற்றும் விறகடுப்பு உள்ளது. நீங்கள் முதலில் எதை எரியூட்டுவீர்கள்?
2. ஒரு மனிதன் தன் மகனை பாடசாலைக்கு காரில் கூட்டிச் சென்றார். போகும் வழியில் நடந்த கோர விபத்தில் தந்தை அங்கேயே பலியானார். அயலவர்கள் பையனை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வந்த டாக்டரோ இது தன்னுடைய மகன் என்றார்! யார் இந்த டாக்டர்?
பதில் :
1. தீக்குச்சியை
2. பையனின் தாயாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக