Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 15 மார்ச், 2022

ரூ. 6,499 விலையில் புது ஸ்மார்ட்போனா? Itel A48 ஸ்மார்ட்போன் வாங்க ரெடியா?

சீனாவை தளமாகக் கொண்ட மொபைல் போன் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஐடெல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சாதனம் Itel A49 ஆகும். இது நிறுவனத்தின் Itel A48 மற்றும் Itel A47 ஆகியவற்றின் வாரிசாக வருகிறது. இந்த புதிய சாதனம் 7,000 ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட சமீபத்திய சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விபரங்களைப் பார்க்கலாம்.

பட்ஜெட் விலையை விட குறைந்த விலையில் புது ஸ்மார்ட்போனா?

இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.6' இன்ச் HD+ வாட்டர் டிராப் நாட்ச் அம்சத்தைக் கொண்ட இந்தியாவில் மிகவும் மலிவு விலை ஸ்மார்ட்போனாகப் பேசப்படுகிறது. ஐடெல் வழங்கும் புதிய நுழைவு நிலை ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை ஆகியவற்றைப் பார்ப்போம். இந்த ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டு, பட்ஜெட் விலை பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உங்களுக்கும் பட்ஜெட் விலையில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இந்த சாதனத்தை பாருங்கள்.

Itel A49 ஸ்மார்ட்போனுக்கான விவரக்குறிப்புகள்

சமீபத்திய Itel A49 ஆனது 6.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வாட்டர் டிராப் நாட்ச் உடன் வருகிறது. இந்த சாதனம் 720 × 1600 பிக்சல்களின் HD+ தெளிவுத்திறனை வழங்குகிறது. மேலும் இது ஒரு நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும், இது 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1.4GHz குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஆனால், செயலியின் சரியான பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. சாதனத்தில் உள்ள செயலி 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ்

இந்த புதிய Itel A49 உள் சேமிப்பகத்தை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128 ஜிபி வரை விரிவாக்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 (Go Edition) இல் இயங்குகிறது. கேமரா மாட்யூலைப் பொறுத்தவரை, Itel A49 ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் 5 எம்பி பிரதான கேமரா மற்றும் VGA சென்சார் மற்றும் LED பிளாஷ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் வாட்டர் டிராப் நாட்ச் உள்ளே 5 எம்பி முன் கேமரா கொண்டுள்ளது.

4000 mAh பேட்டரி அம்சம் 

மேலும், Itel A49 ஆனது AI ஃபேஸ் அன்லாக் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருக்கான ஆதரவுடன் வருகிறது. இந்த சாதனம் 4000 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது மற்றும் சார்ஜிங் தொழில்நுட்பம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, Itel இன் புதிய ஸ்மார்ட்போன் 5W/ 10W சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது Itel A49 ஸ்மார்ட்போனுக்கான விலை விவரங்கள் பற்றி பார்க்கலாம். Itel A49 வழங்கும் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆனது ஒரே ஒரு சேமிப்பக விருப்பத்தில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

Itel A49 விலை என்ன?

இந்த புதிய மாடல் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மாடலாக வருகிறது. இதன் விலை ரூ. 6,499 ஆகும். இந்த சாதனம் கிரிஸ்டல் பர்பில், டோம் ப்ளூ மற்றும் ஸ்கை சியான் வண்ண விருப்பங்களில் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் வெளியீட்டு சலுகையானது, வாங்கிய 100 நாட்களுக்குள் உடைந்த திரையை ஒரு முறை இலவசமாக மாற்றும் சலுகையை உள்ளடக்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக