மேலும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி-யின் ஐடி அமைப்பின் விரிவான சிஸ்டம் ஆடிட் நடத்த ஒரு ஐடி தணிக்கை நிறுவனத்தை நியமிக்குமாறு வங்கிக்கு உத்தரவிட்டு உள்ளது ரிசர்வ் வங்கி. இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பின்பு முக்கியமான காரணம் உண்டு.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்கள், வர்த்தகம், சேவை குறித்த பல தரவுகளைச் சீனாவில் இருக்கும் சர்வர்களுக்கு இந்திய சர்வர்களில் இருந்து தகவல்களைப் பரிமாற்றம் செய்துள்ளது. இது மத்திய அரசின் விதிமுறை மீறல், மேலும் ரிசர்வ் வங்கி விதிமுறைகள் படி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களைச் சோதனை செய்யவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
சீனாவிற்குத் தகவல் பகிர்வு
ரிசர்வ் வங்கியின் வருடாந்திர ஆய்வில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சர்வர்கள் சீனா-வை தலைமையாகக் கொண்டு இயங்கும் நிறுவன சர்வர்களுக்குப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளது. இந்தச் சீன நிறுவனம் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் மறைமுகமாகப் பங்குகளை வைத்துள்ளது.
பேடிஎம் விளக்கம்
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சீன நிறுவனங்களுக்குத் தரவு கசிவு என்று ப்ளூம்பெர்க் கூறுவது முற்றிலும் தவறானது மற்றும் வெறுமனே பரபரப்பை ஏற்படுத்த முயல்கிறது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி முற்றிலும் இந்தியாவில் வளர்ந்த வங்கி என்பதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும் தரவு உள்ளூர் மயமாக்கல் தொடர்பான ரிசர்வ் வங்கியின் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றியுள்ளோம்.
டிஜிட்டல் இந்தியா
மேலும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் அனைத்து தரவுகளும் இந்தியாவிற்குள்ளேயே தான் உள்ளன. நாங்கள் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா-வை மிகப்பெரிய அளவில் நம்புகிறோம் எனப் பேடிஎம் விளக்கம் கொடுத்துள்ளது.
அலிபாபா, ஆன்ட் குரூப்
பேடிஎம் மற்றும் அதன் உரிமையாளர் விஜய் சேகர் சர்மா இணைந்து பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் பேடிஎம் நிறுவனத்தில் சீனாவின் அலிபாபா குரூப், அதன் கிளை நிறுவனமான ஆன்ட் குரூப் ஆகியவை நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்குகளை வைத்துள்ளது.
விஜய் சேகர் சர்மா கைது
இதேவேளையில் பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா பிப்ரவரி 22ஆம் தேதி தனது காரை வேகமாக ஓட்டிய காரணத்தால் நேற்று கைது செய்யப்பட்டு உடனடியாகப் பெயில் பெற்ற வெளியேறியது குறிப்பிடத்தக்கது. பேடிஎம் ஐபிஓ தோல்வியைத் தொடர்ந்து விஜய் சேகர் சர்மா தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகிறார்
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக