டிஜிட்டல் பேமெண்ட சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.
மேலும் இந்த டிஜிட்டல் பேமெண்ட் துறையில் ஏற்கனவே பேடிஎம்,போன்பே, கூகுள் பே, அமேசான் பே எனப் பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில்டாடா குழுமம் இந்த துறையில் புதிதாக இறங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது உப்பு முதல் விமானம் வரை பல பொருள்களை உற்பத்திசெய்துவரும் டாடா நிறுவனம் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் அறிமுகமாவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக டிஜிட்டல் பேமெண்ட்-ஐ உருவாக்க டாடா டிஜிட்டல் நிறுவனம் ஐசிஐசி வங்கியின் உதவியைப் பெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் UPI தளத்தின் உதவியுடன் பேமெண்ட் சேவையை அளிக்க NPCI அமைப்பிடம் ஒப்புதல் பெற டாடா குழுமம் காத்துக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
கூகுள் பே,போன்பே போன்ற நிறுவனங்கள் வங்கிகளின் உதவியுடன் தான் யூபிஐ பேமெண்ட் சேவையை அளித்து வருகிறது. இதே வழியை தான் டாடாவும் பின்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் டாடா குழுமம் தனது புதிய யூபிஐ செயலி மற்றும் சூப்பர் ஆப் டாடா நீரு-வை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதேபோல் இதுபோன்ற செயலிகள் மொபைல் ரீசார்ஜ்களின் தொந்தரவைக் குறைத்துள்ளன. அதாவது முன்பு மொபைல் பயனர்கள் தங்களுக்கு ரீசார்ஜ் செய்ய கடைக்குச் சென்று டாப்-அப் திட்டங்களை வாங்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது பயனர்களுக்கு எளிதான ரீசார்ஜ் வசதியை வழங்கும் போன்பே, பேடிஎம், கூகுள் பே போன்ற பல செயலிகள் உள்ளன.
குறிப்பாக இதுபோன்ற செயலிகள் பயனருக்கு பணம் அனுப்பவும் பெறவும், மொபைல், டி.டி.எச் அல்லது பிராட்பேண்ட் இணைப்புகளை எந்த வெளிப்புற தொந்தரவும் இல்லாமல் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. அதேபோல் இதுபோன்ற செயலிகளில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்போது,கேஷ்பேக் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைப்பதால், தற்போது அதிகளவில் மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
மேலும் இப்போது டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளில் பிரதானமாக இருப்பது கூகுள்பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்டவைகள் ஆகும். குறிப்பாக இந்நிறுவனங்கள் வழங்கும் ஒரு சில சலுகைகள் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும்
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக