Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 மார்ச், 2022

இந்தியாவுக்கு பெரிய ஆபத்து.. உக்ரைன் - ரஷ்யா போரால் வந்த வினை!


ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தற்போது நடந்து வரும் போர் உலகின் மற்ற நாடுகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மூடிஸ் ஆய்வறிக்கையின்படி, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரின் தாக்கத்தால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக செமிகண்டக்டர் சிப்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

செமிகண்டக்டர் சிப்கள் எலக்ட்ரானிக் உபகரணங்கள், ஆட்டோமொபைல் தொழில் மற்றும் மொபைல் போன் துறையில் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்று போர் தொடர்ந்தால் அனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று எலெக்ட்ரானிக் உபகரண உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

இதனால் எலெக்ட்ரானிக் பொருட்களின் விலையும் வரும் நாட்களில் அதிகரிக்கலாம்.
செமிகண்டக்டர் சிப்களை தயாரிக்க நியான் மற்றும் பல்லேடியம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு பொருட்களும் சிப் தயாரிக்க மிக முக்கியமானவை. 

உக்ரைன் - ரஷ்யா போரின் விளைவாக இதன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உண்மையில், உலகின் ஒட்டுமொத்த பல்லேடியம் விநியோகத்தில் 44 சதவீதப் பங்குகளை ரஷ்யா கொண்டுள்ளது. அதேபோல, 70 சதவீத நியான் உக்ரைனில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் போர் காரணமாக பல்லேடியம் மற்றும் நியான் உற்பத்தியும் பாதிக்கப்படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக