Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 14 மார்ச், 2022

பால் குடிக்காத பூனை... தெனாலிராமனின் தந்திரம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------------------
தெனாலிராமனும்... பூனையும்...!!
-----------------------------------------------------------------
🐱 கிருஷ்ண தேவராயரின் அரண்மனையில் ஒரு நாள் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு இருக்கும் அமைச்சர்கள் எல்லோரும் இந்த உலகத்திலேயே எந்த விலங்கு புத்திசாலியானது, சமத்தானது, சொன்ன சொல் கேட்கக்கூடியது என்று விவாதித்தார்கள்.

🐱 கடைசியாக பூனைதான் சிறந்த வீட்டு விலங்கு என்று முடிவு செய்தார்கள்.

🐱 உடனே அரசர் நம் நாட்டில் உள்ள பூனைகளுக்கு எல்லாம் ஒரு போட்டி. யாருடைய பூனை சொன்ன சொல் கேட்டு நடக்கிறதோ அந்த பூனையோட முதலாளிக்கு ஆயிரம் பொன் காசு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

🐱 இதைக் கேட்ட தெனாலிராமனுக்கு ஒரே குசி...

🐱 தானும் அந்த போட்டியில் கலந்து கொண்டு ஜெயிச்சா அந்த பணம் நமக்குதான் என்று நினைத்தார்.

🐱 போட்டி அன்று எல்லோரும் தங்களின் பூனைகளை கொண்டுவந்து போட்டியில் கலந்து கொண்டார்கள்.

🐱 போட்டியை தொடங்கி வைத்த முதலமைச்சர் எல்லா பூனைக்கும் தட்டில் பால் வைப்போம். எந்த பூனை நாம் சொல்வதற்;கு முன்னால் பால் குடிக்குதோ அது தோல்வி அடைந்த பூனை என்று கூறினார்.

🐱 அதுபோல் எல்லா பூனைகளுக்கும் பால் கொண்டு வந்து வைத்தார்கள்.

🐱 ஆனால் தெனாலிராமனின் பூனையை தவிர எல்லா பூனைகளும் பாலைக் குடித்துவிட்டன.

🐱 இதை பார்த்த அரசர் தெனாலிராமன் பூனைதான் வெற்றி பெற்றது என அறிவித்துவிட்டு, பொன் மூட்டையை தெனாலிராமனிடம் கொடுத்தார்.

🐱 அரசர் தெனாலிராமனிடம் அது எப்படி? உன் பூனை மட்டும் பால் குடிக்க வரவே இல்லை என்று கேட்டார்.

🐱 அதற்;கு தெனாலிராமன் அரசே ஒரு நாள் பூனைக்கு நான் சூடான பாலை கொண்டு வந்து வைத்தேன்.

🐱 அவசரபட்ட பூனை அந்த பாலை குடித்து வாய சுட்டுகிடுச்சு, அதிலிருந்து நான் சொல்லும் வரை அது பாலை குடிக்காது என்று சொன்னார்.

🐱 தெனாலிராமன் பூனையை பழக்கப்படுத்திய விதத்தை எல்லோரும் பாராட்டினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக