>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 22 மார்ச், 2022

    மனைவி மட்டன் சமைக்காததால் ஆத்திரத்தில் போலீசில் புகாரளித்த கணவர்!

    நமக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை தீர்க்க காவல்துறையை நாடுவது இயல்பான ஒன்று. காவல் துரையின் பொது எண்ணான 100க்கு அழைத்து நாம் புகார் தெரிவிக்கலாம், அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். 

    அதேசமயம் காவலர்களுக்கு தேவையில்லாமல் தொந்தரவு கொடுத்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்பதை தெலங்கானாவில் ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது. 

    தனது மனைவி தனக்கு மட்டன் சமைத்து தரவில்லை என்பதற்காக அவரை போலீசில் புகாரளிக்கும் நோக்கில் விடாமல் 100 என்கிற எண்ணிற்கு அழைப்பு விடுத்தல் கடுப்பான போலீசார் அவரை கைது செய்து காவலில் வைத்துவிட்டனர்.

    நல்கொண்டா மாவட்டத்திலுள்ள செர்லா கௌராராம் என்கிற கிராமத்தை சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த ஹோலி பண்டிகை தினத்தன்று செய்த வினோதமான செயல் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

    பண்டிகை தினத்தில் நவீன் மது அருந்திவிட்டு அவரது மனைவியிடம் தனக்கு ஆட்டிறைச்சி சமைத்து தருமாறு கூறியுள்ளார், ஆனால் அவர் மனைவி அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டார். 

    இதனால் ஆத்திரமடைந்த நவீன் மனைவிக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்க எண்ணினார். அதனை தொடர்ந்து மது போதையில் இருந்த நவீன் காவல் துறைக்கு புகார் அளிக்க கொடுக்கப்பட்டுள்ள 100 என்கிற எண்ணிற்கு டயல் செய்து மனைவி தான் சொன்னபடி தனக்கு இறைச்சி சமைத்து தரவில்லை என்று கூறினார்.

    இவரின் புகாரை போலீசார் கண்டுகொள்ளாமல் நிராகரித்துவிட்டனர், இருப்பினும் போதையில் இருந்த நவீன் மீண்டும் மீண்டும் போலீசிற்கு டயல் செய்துள்ளார். கிட்டத்தட்ட அவர் ஐந்து தடவைக்கு மேல் காவல் துறையினருக்கு டயல் செய்து கொண்டே இருந்திருக்கிறார். 

    இதனால் பொறுமையிழந்த போலீசார் நவீனுக்கு தகுந்த பாடம் புகட்ட எண்ணினார், அதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து காவலில் வைத்தனர். சமைத்து தராத மனைவியை புகாரளிக்க எண்ணிய கணவரையே போலீஸ் கம்பி எண்ண வைத்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக