இந்த இரண்டு புதிய திட்டங்களின் மதிப்புகள் ரூ. 2878 மற்றும் ரூ. 2998 ஆகும். இந்த இரண்டு திட்டங்களும் நீண்ட கால டேட்டா பேக் விருப்பங்களைத் தேடும் பயனர்களுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாள் எண்டு இங்கு குறிப்பிடப்படுவது 365 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியாகும்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
ஜியோ அறிமுகம் செய்த 2 டேட்டா பேக்குகள்
இந்த திட்டங்களை இரண்டும் டேட்டா பேக்குகள் மட்டுமே என்பதால் ஜியோ பயனர்கள் இதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு டேட்டாவின் தேவை எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு தெரியும். அதேபோல், இந்தியாவில் OTT பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதால் வீடுகளில் டேட்டா தேவை அதிகரித்துள்ளது.
இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக ஜியோ அறிமுகம் செய்தது தான் இந்த டேட்டா பேக்குகள். இவை பயனர்களுக்குக் குரல் அழைப்பு மற்றும் SMS பலன்களை வழங்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த புதிய ரூ. 2,878 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 2878 ப்ரீபெய்ட் திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தில் வழங்கப்படும் மொத்த டேட்டா 730ஜிபி ஆகும். தினசரி நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) தரவைப் பயனர் பயன்படுத்தியவுடன், இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த புதிய ரூ. 2,998 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த புதிய ரூ.2998 ப்ரீபெய்ட் திட்டம் முந்தைய திட்டத்தை விட சில ரூபாய்கள் மட்டுமே விலை அதிகம். கணிசமான விலை அதிகரிப்புடன் கிடைக்கும் இந்த திட்டமானது அதன் பயனர்களுக்கு 365 நாட்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் மொத்த டேட்டா ஆண்டு முழுவதும் 912.5 ஜிபி ஆகும். இந்த திட்டத்திலும், FUP டேட்டா பயன்படுத்தப்பட்டவுடன், பயனர்களுக்கு இணைய வேகம் 64 Kbps ஆக குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களின் தினசரி டேட்டாவை அதிகரிக்க இது ஒரு வழியா?
இந்த இரண்டு திட்டங்களும் ஒரு நுகர்வோர் தனது அடிப்படை ப்ரீபெய்ட் திட்டத்தில் பெறும் தினசரி டேட்டாவை அதிகரிக்க உதவும் என்று நிறுவனம் கூறியுள்ளது. நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், இந்த திட்டங்கள் உங்களுக்கு நிறைய பயனளிக்கும். இந்தத் திட்டங்கள் தனித்த செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும், எனவே உங்கள் அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் காலாவதியானாலும் அவை செயலில் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
ஜியோ வழங்கும் WFH திட்டங்கள் சிறந்தவையா?
அப்படிப்பட்ட திட்டம் யாருக்காவது தேவையா இல்லையா என்பது காலம்தான் பதில் சொல்லும். இப்போதைக்கு, பயனர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுக்குக் கிடைக்கும் MyJio ஆப் மூலம் இந்தத் திட்டங்களைத் தேர்வுசெய்யலாம். ஜியோ வழங்கும் WFH திட்டங்களில் அதிக டேட்டா உள்ளது, அதை நீங்கள் பார்க்கலாம். உங்களுக்கு இந்த திட்டங்கள் பிடித்திருந்தால் அவற்றைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள். அடிப்படை திட்டத்தின் மேல் கூடுதல் டேட்டா தேவையுள்ள பயனர்களுக்கு இந்த 2.5ஜிபி டேட்டா போதுமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக