தெற்கு சீனாவின் குவாங்சி (Guangxi) பகுதியில் 630 அடி வரை நீளும் ஆழத்தில் 176 மில்லியன் கன அடிக்கு மேல் பரந்து விரிந்து கிடக்கும் ஒரு பழங்காட்டை குகை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கு அடியில் ஒளிந்திருந்த இந்த பழங்காடானது 130 மீட்டர் உயரமுள்ள மரங்களைக் கொண்ட ஒரு மடுவின் அடிப்பகுதியில் மறைந்து, செழித்து, வளர்ந்து வந்துள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களால கண்டுபிடிக்கப்படாத, அறிவிக்கப்படாத சில தனித்துவமான உயிரினங்களின் தாயகமாக இந்த காடு இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர். "இந்த குகைகளில் இதுவரை அறிவியலால் அறிவிக்கப்படாத அல்லது விவரிக்கப்படாத இனங்கள் உள்ளன என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட மாட்டேன்" என்று பயணக் குழுவை வழிநடத்திய சென் லிக்சின் கூறி உள்ளார்
மேலும் சீன அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த தளம் அதன் சுவர்களில் மூன்று குகைகளையும், கீழே நன்கு பாதுகாக்கப்பட்ட பழமையான காடுகளையும் கொண்டுள்ளது. இப்பகுதியில் உள்ள சின்க்ஹோல்கள், கார்ஸ்ட் நிலப்பரப்பின் (karst landscapes) ஒரு பகுதியாகும் மற்றும் நிலத்தடி நீர், பாறைகளை கரைக்கும் போது உருவாகிறது, இதனால் குகையின் "கூரை" இடிந்து விழுகிறது. இதுபோன்ற குழிகளை உள்ளூர்வாசிகள் ஷென்யாங் டியான்கெங் (Shenyang Tiankeng) அல்லது "தி பாட்டம்லெஸ் பிட்" (“the bottomless pit) என்று அழைக்கின்றனர். குவாங்சி டெய்லி செய்தித்தாளின் அறிக்கையின்படி, இப்படியான "குழிகள்" ஆபத்தானது, விசித்திரமானது, செங்குத்தானது மற்றும் அழகானது.
இது குறித்து ஆசிய குகைகள் கூட்டணியின் தலைவர் ஜாங் யுவான்ஹாய், ஜியோபார்க்கின் பாதுகாப்பு நோக்கத்தை மறுசீரமைக்கவும், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு தளங்களை நிறுவவும், உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்த குகைக்குள்ளான அறிவியல் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று கூறி உள்ளார். இந்த குகைக்குள் செல்ல குகையின் இருபக்கமும் இணைக்கப்பட்டு செங்குத்தாக கீழே இறங்கும் ஒற்றை கயிறு நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 100 மீட்டர்கள் செங்குத்தாக இறங்கும் போது அடர்த்தியான தாவரங்கள் மற்றும் மரங்களைக் காண முடிந்துள்ளது.
குகைக்குள் இறங்கிய ஆராய்ச்சியாளர்கள் குழுவானது குழியின் அடிப்பகுதியை அடைந்ததும் அதை வெப்பமண்டல மழைக்காடுகளாக வகைப்படுத்தியது, மரங்கள் மேல்நோக்கி நீண்டு, உயரமாகவும் ஆனால் மிகவும் மெல்லியதாகவும் வளர்ந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
"குகைக்குள் சென்ற குழு குழியின் அடிப்பகுதியில் ஒரு பெரிய காட்டு வாழைப்பழத்தையும், அதே போல் ஒரு அரிய சதுர மூங்கிலையும் கண்டுபிடித்துள்ளது. ஆனால், குழியின் அடிப்பகுதியில் நிலத்தடி நதியை இணைக்கும் குகை எதுவும் இல்லை, மேலும் இந்த குழியின் நிலத்தடி நதியானது திசை திருப்பப்பட்டு இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது" என்று குவாங்சி டெய்லி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக