Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 25 மே, 2022

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடிக்க 'இதுதான்' காரணம்..! உண்மையை உடைத்த DRDO..!

இந்தியாவில் எல்கட்ரிக் வாகனங்களுக்கான மோகம் உச்சத்தில் இருந்த வேளையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் சாமானிய மக்கள் மத்தியில் பயத்தையும், பல கேள்விகளையும் எழுப்பியது.

இதோடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதிகளவிலான தொழில்நுட்ப கோளாறுகள், பேட்டரி சார்ஜ் அளவீடு, மைலேஜ் எனப் பல கோளாறுகள் ஏற்படும் காரணத்தால் மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் இரு சக்கர வானங்கள் மீதான மதிப்பு குறைந்துள்ளது.

இந்தப் பிரச்சனைகளுக்கான ஆரம்பப் புள்ளியாக இருந்த தீ பிடித்து எரிந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக DRDO அமைப்புக் களத்தில் இறங்கியது.

டிஆர்டிஓ அமைப்பு 

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தீ வெடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் திங்களன்று மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்தது தொடர்பான விசாரணை அறிக்கையைச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் (MoRTH) சமர்ப்பித்தது.

பேட்டரி தரம்

இந்த ஆய்வறிக்கையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரிய முக்கியக் காரணம் எலக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் பேட்டரிகளின் மிகவும் மோசமான தரமும், நிறுவனங்கள் பேட்டரியை கையாண்ட தொழில்நுட்ப முறையில் இருக்கும் கோளாறும் தான் என உண்மையைப் புட்டு புட்டு வைத்துள்ளது.


முக்கிய பிரச்சினை

மத்திய அரசின் உத்தரவின் பெயரில் தீப்பிடித்த வாகனங்களை வைத்து ஆய்வு செய்த போது தரமற்ற பேட்டரி, பியூஸ் இல்லாதது, பேட்டரியின் வெப்பத்தைக் குறைக்க முறையாகத் தெர்மல் மேனேஜ்மென்ட் செய்யாதது மற்றும் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டத்தில் இருக்கும் கோளாறுகள் தான் எனச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் DRDO அறிக்கை சமர்ப்பித்துள்ளது

ARAI அமைப்பு குற்றச்சாட்டு

கடந்த மாதம் Automotive Research Association of India (ARAI) வெளியிட்ட அறிவிப்பில் புதிய எலக்ட்ரிக் வாகனங்களைச் சோதனைக்கு அனுப்பும் போது A தரம் பேட்டரிகளைப் பொருத்தி அனுப்புகிறது, ஆனால் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தரமற்ற பேட்டரிகளைப் பொருத்துகிறது எனத் தெரிவித்தது.

இது ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கான விதிமுறைகளில் திடீர் சோதனைக்கான இடம் இல்லாததைப் பயன்படுத்தித் தரமற்ற வாகனங்களையும், பேட்டரிகளையும் பயன்படுத்துவதாக ARAI குற்றம்சாட்டியது.

பேட்டரி பரிசோதனை கூடம்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் DRDO அறிக்கையை ஓலா, ஒகினாவா, ஜிதேந்திரா EV, ப்யூர் EV மற்றும் பூம் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனத்துடன் பகிர்ந்து உள்ளது. மேலும் சமீபத்திய தீ விபத்தில் சிக்கிய வாகனங்களின் நிறுவனங்கள் அனைத்தும் உடனடியாகப் பேட்டரி-களைப் பரிசோதனை செய்யும் கூடங்களை அமைக்குமாறு நிறுவனங்களைக் கேட்டுள்ளது.


விளக்கம் தேவை

மேலும் DRDO அறிக்கையின் கண்டுபிடிப்புகள் குறித்து ஓலா, ஒகினாவா, ஜிதேந்திரா EV, ப்யூர் EV மற்றும் பூம் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

நிதின் கட்கரி

முன்னதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் அலட்சியமாகச் செயல்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், அறிக்கை கிடைத்தவுடன் அனைத்து குறைபாடுள்ள எலக்ட்ரிக் வாகனங்களையும் திரும்பப் பெற உத்தரவிடப்படும் என்றும் கூறியிருந்தார்.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக