இந்தியர்களைப் பொறுத்தவரை சேமிப்பு என்றால் முதலாவதாக ஞாபகம் வருவது தங்கமாக தான் இருக்கும். நகை அணிகலன்களாக இருந்தாலும் சரி, தங்க பிஸ்கட்டுகளாக இருந்தாலும் சரி, தங்க கட்டிகளாக இருந்தாலும் சரி தங்கத்தை வாங்குவதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
பணம் என்பது ஒரு பேப்பர் தான் என்று எந்த ஏதாவது ஒரு காலகட்டத்தில் கூறப்பட்டால் பொதுமக்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவுவது தங்கம் மட்டுமே. இலங்கையில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பித்துவிட்டனர் என்பது ஒரு மிகச்சிறந்த் உதாரணம்.
இதனால்தான் தங்கத்தின் மீது பொதுமக்களுக்கு அதிக கவர்ச்சி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டிஜிட்டல் முறையில் 100 ரூபாய்க்கு கூட தங்கம் வாங்கலாம் என்ற வசதி வந்த பிறகு நம்மிடம் இருக்கும் காசுக்கு தகுந்த மாதிரி தங்கம் வாங்க பொதுமக்கள் முயற்சித்து வருகின்றனர்.
PhonePe SIP
அந்த வகையில் PhonePe தனது செயலி மூலம் தங்கத்தை SIP திட்டம் மூலம் வாங்கலாம் என அறிமுகம் செய்துள்ளது. இதன்படி PhonePeயின் ஒவ்வொரு பயனரும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை 24 காரட் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்றும், பயனாளர்கள் முதலீடு செய்த தங்கம் வங்கி லாக்கரில் பராமரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

பணமாகவும் மாற்றலாம்
அதேபோல் பயனர்கள் தாங்கள் வாங்கிய தங்கத்தை எந்த நேரத்திலும் விற்று அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் தாங்கள் வாங்கிய தங்கத்தின் மூலம் கடன் பெறலாம் என்றும் அறிவித்துள்ளது.
டோர் டெலிவரி வசதி
அதுமட்டுமின்றி தங்கத்தை நாணயமாகவோ அல்லது கட்டியாகவோ வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் வசதியையும் PhonePe தந்துள்ளது. தற்போது PhonePe செயலியில் 380 மில்லியன் பயனாளர்கள் இருக்கும் நிலையில் அதில் பெரும்பாலானவர்கள் தங்கத்தை SIP மூலம் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அறிந்து கொள்வோம்
,
ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக