குஜராத்தை சேர்ந்த மின்சார வாகனம் தயாரிக்கும் நிறுவனமான நிறுவனமான கிரேட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ் (Greta Electric Scooters), தனது கிரேட்டா ஹார்பர் இசட்எக்ஸ் சீரிஸ்-I (Greta Harper ZX Series-I) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்தது.
இதன்படி புதிய மாடலான Greta Harper ZX Series-I-ஐ பேட்டரி இல்லாமல் ரூ.41,999 (எக்ஸ்-ஷோரூம்) என்ற அடிப்படை விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது கிரேட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ் நிறுவனம். ஆம், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான பேட்டரி மற்றும் சார்ஜர் ஆகியவை தனித்தனியாக விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப பேட்டரி மற்றும் சார்ஜரை தேர்வு செய்து சிறந்த ஸ்கூட்டரை வீட்டிற்கு கொண்டு செல்லமுடியும் என்று நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.
இந்த ஸ்கூட்டர் BLDC மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 48-60 Volt Li-Ion பேட்டரி வேரியன்ட்களை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பல்வேறு வோல்ட்டேஜுடன் 60 கிமீ முதல் 100 கிமீ வரையிலான பேட்டரி ரேஞ்ச்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம் மற்றும் இவற்றின் விலை ரூ.17,000 முதல் ரூ. 31,000 வரை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஸ்கூட்டருக்கு 3 வருட பேட்டரி உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. Greta Harper ZX Series-I-க்கு, நிறுவனம் மொத்தம் 4 பேட்டரி ஆப்ஷன்களை வழங்குகிறது. அவை பின்வருமாறு:
V2 48v-24Ah - ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிமீ (ரூ.17,000 -ரூ.20,000)
V3 48v-30Ah - ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிமீ (ரூ.22,000 - ரூ.25,000)
V2+60v-24Ah - ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிமீ (ரூ.21,000 - ரூ.24,000)
V3+60v-30Ah - ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிமீ (ரூ. 27,000 - ரூ.31,000)
அதே போல வாடிக்கையாளரின் விருப்பத்தை பொறுத்து, சார்ஜரின் விலை ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை இருக்கும் என்றும் நிறுவனம் கூறி இருக்கிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இப்போது ரூ.2,000 செலுத்தி புக்கிங் செய்யலாம் மற்றும் புக்கிங் வரிசை படி 45-75 நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என்று கிரேட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ் நிறுவனம் கூறி இருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் Eco, City மற்றும் Turbo ஆகிய 3 ரைடிங் மோட்ஸ்களுடன் வருகிறது. Eco Mode-ல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ, City Mode-ல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிமீ மற்றும் Turbo Mode-ல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 கிமீ வரை ஓடும் என்று நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர் க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் கன்ட்ரோலர், ஹைவே லைட்ஸ், சைட் இண்டிகேட்டர் பஸர் மற்றும் டிரிப் ரீசெட் கொண்ட எல்இடி மீட்டர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக