Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 15 ஜூன், 2022

எலெக்ட்ரிக் கார் ஆக உருமாற்றப்பட்ட கிளாசிக் 1998 மாடல் பிஎம்டபிள்யூ மினி கார்!

பிஎம்டபிள்யூ மினி ஆனது பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் ஆன பால் ஸ்மித்துடன் இணைந்து 1998 மினி பால் ஸ்மித் எடிஷனில் இருந்து ஒரு கிளாசிக் மினி எலெக்ட்ரிக் மாடலை உருவாக்கி உள்ளது. இந்த கஸ்டமைஸ்டு கார் ஆனது மினி ரீசார்ஜ்டு ப்ராஜெக்ட்டின் ஒரு பகுதியாகும். மேலும் இது பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தின் இணைவைக் கொண்டாடும் ஒரு கார் ஆகும். இதற்காக மினி ஒரிஜினல் மாடலில் எலெக்ட்ரிக் மோட்டார் நிறுவப்பட்டுள்ளது, மேலும் இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கார ஆனது ஜூன் 2022 இல் மிலனில் உள்ள சலோன் டெல் மொபைலில் அதன் உலகலாவிய அறிமுகத்தை காணும்.

ரீசார்ஜ்டு ப்ராஜெக்ட்டின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மினி காரில் 72 கிலோவாட் மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ பிராண்டின் எமிஷன் இல்லாத கார்களின் வரிசையில் உள்ள மற்ற மாடல்களுடன், ஆல்-எலக்ட்ரிக் மினி கூப்பர் எஸ்இ மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் டிரைவ் கொண்ட மினி கூப்பர் எஸ்இ கன்ட்ரிமேன் ஆகியவைகளும் அடங்கும். இந்த லேட்டஸ்ட் மாடல் ஆனது நிறுவனத்தின் மின பிராண்ட் உடன் சேர்த்து ஸ்மித்தின் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

இந்த ரீசார்ஜ்டு மினி மாடலை பற்றி, ஸ்மித் மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்தி விவரிக்கிறார் - தரம், நிலைத்தன்மை மற்றும் செயல்பாடு. இந்த திட்டம் பாரம்பரியம் மற்றும் காலமற்ற வடிவமைப்பை போற்றுகிறது; குறிப்பாக 1959 இல் முதல் மினி வாகனத்தை உருவாக்கிய சர் அலெக் இசிகோனிஸின் பணியிலிருந்து உத்வேகம் பெறுகிறது.

மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள மினி எலெக்ட்ரிக் காரின் வெளிப்புறம் பிரகாசமான நீல நிற ஷேடையும் மற்றும் லைம் க்ரீன் பேட்டரி பாக்ஸையும் பெற்றுள்ளது, இது 1990 களின் கலர் பேலட்களை நினைவுபடுத்துகிறது. நீல நிற ஷேட் ஆனது ஒரிஜினல் 1998 மினி பால் ஸ்மித் எடிஷனில் இருந்து "கடன்" வாங்கப்பட்டது - இது 1,800 யூனிட்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கார் ஆகும்; மேலும் பால் ஸ்மித்தின் விருப்பமான சட்டைகளில் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்வாட்ச் அடிப்படையில் ஒரிஜினல் காரின் ஷேட் தேர்ந்தெடுக்கப்பட்டது.

உட்புறத்தை பொறுத்தவரை, புதிதாக வடிவமைக்கப்பட்ட கார் ஆனது மினி ஸ்டிரிப்பின் சஸ்டெயினபிள் கான்செப்ட்டின் கூறுகளை கடன் வாங்குகிறது. அதாவது பாடிஷெல் வெறுமையாக உள்ளது மற்றும் அன்க்ளாட் ப்ளோர் பான்-ஐ கொண்டுள்ளது.நினைவூட்டும் வண்ணம் பழமையான தரை விரிப்புகள் மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பரால் செய்யப்படுகின்றன. இந்த காரில் பயன்படுத்தப்படும் கூறுகள் புதுமையானவைகளாக உள்ளன மற்றும் வளங்களைச் சேமிக்கும் பொருட்களிலிருந்து தயார் செய்யப்படுகின்றன. ஸ்மார்ட்போனுக்காக, ஸ்டீயரிங் வீலுக்கு அடுத்ததாக ஒரு மேக்னட் உள்ளது, இது ஸ்பீடோமீட்டரைத் தவிர, டாஷ்போர்டில் உள்ள அனைத்து பழைய பட்டன்கள் மற்றும் செயல்பாடுகளை மாற்றுகிறது. மற்றொரு புதுமையான பார்ட் - ஸ்டீயரிங் ஆகும், இது காரில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதியாக முற்றிலும் அகற்றப்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக