கோவிட் பரவத் தொடங்கியது முதல் சமூக இடைவெளி, கைபடாமல் பொருட்களைக் கொடுக்கும் டெலிவரி முறைகள் பழக்கத்தில் வந்துள்ளன. அப்போது உதித்த ஒரு திட்டம்தான் ட்ரோன் முறையில் டெலிவரி செய்யும் திட்டம். முதலில் தெலுங்கானா மாநிலம் மக்களுக்கு தேவையான மருந்துகளை ட்ரோன் மூலம் வினியோகிக்க முயற்சித்தது.
HLL எனும் அரசு சார்ந்த நிறுவனத்துடன் இணைந்து அடிப்படை மருந்துகளையும், தடுப்பூசிகளையும் வினியோகிக்கத் தொடங்கின. இதை அடுத்து இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான ICMR தங்களது மருந்துகளையும் தடுப்பூசிகளையும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்ற டிரோன்களை பயன்படுத்தியது. மேலும் தரையில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் 35 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் ட்ரோன்களை வாங்க உள்ளது.
இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் ஒரு ட்ரோன் விஷுவல் சைட் அதாவது பார்க்கும் தூரத்தில் மட்டும் பறக்கவிட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 450 மீட்டர் வரை இந்தியாவில் ட்ரோன்களை இயக்க அனுமதிக்கிறது.புதிய முயற்சியில் 20 கிமீ வரை இயக்க அனுமதிக்க உள்ளது
மே 2019 இல், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ட்ரோன் அடிப்படையிலான விநியோகங்கள் மற்றும் பிற நீண்ட தூர ட்ரோன் பயன்பாட்டு நிகழ்வுகளை நிர்வகிக்கும் விதிமுறைகளை உருவாக்குவதற்கு முன்னதாக திறன் குறிப்புகளைச் சேகரிக்க சோதனை BVLOS (பார்வைக்கு அப்பால்) ட்ரோன் விமானங்களை பறக்க விடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. “இது குறித்த பொதுமக்கள் கருத்துக்கான வரைவு வழிகாட்டுதல்களை டிசம்பர் 31, 2021 க்குள் வெளிடிட்டோம். இறுதி வழிகாட்டுதல்களை 2022 இறுதிக்குள் வெளியிடுவோம்” என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அம்பர் துபே கூறினார். அரசின் சோதனைத் திட்டத்தின் கீழ் கலந்துகொள்ள 34 கூட்டமைப்புகள் அனுமதி கோரின. அதில் 3 அமைப்பிற்கு மட்டும் அனுமதி கிடைத்துள்ளது. ஆன்றா (ANRA )எனப்படும் நிறுவனத்திற்கும், THROTTLE, தக்ஷா நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ANRA டெக்னாலஜிஸ், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ரோபருடன் இணைந்து மருந்துகளை ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்ய உள்ளது. உத்தரபிரதேசத்தின் ஜவாராவில் ஸ்விக்கியுடன் இணைந்து ஆன்லைன் உணவு ஆர்டர்களை ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் பரிசோதனையை மேற்கொள்ள உள்ளது.
ANRA டெக்னாலஜிஸ், ட்ரோன் செயல்பாடுகளை நிர்வகிக்க அதன் SmartSkies இயங்குதளத்தைப் பயன்படுத்தும். ANRA ஸ்காட்லாந்தில் உள்ள மருத்துவமனைகளை இணைக்கும் ட்ரோன் டெலிவரி நெட்வொர்க்கை உருவாக்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் ட்ரோன் சேவையை செய்து வருகிறது.
த்ரோட்டில்(THROTTLE) நிறுவனம் , ஜூன் 21 அன்று தனது சோதனை விமானத்தை முறைப்படி தொடங்குகிறது. அதற்கு முன், ஜூன் 18-19 தேதிகளில் முன்சோதனைகளை நடத்தும். குறிப்பிட்ட வரையறைக்குள் மருந்துகளை வழங்குவதற்காக நாராயண ஹெல்த்கேருடன் கூட்டு சேர்ந்துள்ளது. தானாக இயங்கி சரியான இடத்தில் தரையிறங்கி டெலிவரி செய்யும்படியான முறையைக் கையாள உள்ளது.
வரும் வார இறுதியில் சோதனைகளை தொடங்க உள்ளதாக தக்ஷா ஆளில்லா விமான முறைமை தலைமை நிர்வாக அதிகாரி ராமநாதன் "நாங்கள் 20-30 நாட்களுக்குள் எங்கள் சோதனைப் பகுதியின் மேப்பிங் மற்றும் குறுகிய தூரத்தில் பொருள் நகர்வுகள் போன்ற பல்வேறு செயல்பாடுகளைச் சோதித்து வருகிறோம். எதிர்காலத்தில், இந்த தொழில்நுட்பத்தை முக்கியமாக மருத்துவ இயக்கங்களுக்கு பயன்படுத்த இருக்கிறோம் ”என்று கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக