Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 மே, 2022

பரிசளிக்க விரும்பினால்... இதை செய்யுங்கள்... இது எப்படி இருக்கு?

----------------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
----------------------------------------------------
மகன் : எனக்கு இந்த கணக்கு பாடம் சொல்லி தாங்க மா?
அம்மா : எனக்கு கணக்கு தெரியாதுடா மகனே...
மகன் : ஏன் மா?
அம்மா : எங்க அம்மா, அப்பா என்ன படிக்க வைக்கலயே...
மகன் : உனக்கு மட்டும் நல்ல அம்மா, அப்பா கிடைச்சிருக்காங்க...
அம்மா : 😠😠
----------------------------------------------------
அம்மா : ஏன்டா இப்ப அழுதுகிட்டு இருக்க?
மகன் : பள்ளிக்கூடத்துல மிஸ் கிட்ட கேள்வி கேட்டேன்.. அதுக்கு அடிச்சுட்டாங்க...
அம்மா : அப்படி என்ன கேள்வி கேட்ட?
மகன் : உங்களுக்கெல்லாம் யார் வேலை குடுத்தது?-னு கேட்டேன்.
அம்மா : 😥😥
----------------------------------------------------
இது எப்படி இருக்கு?
----------------------------------------------------
😛 முதல் 3 தோசை சாப்பிடுற வரைக்கும் வேணுமா வேணுமான்னு கேட்குறாங்க! அஞ்சாவது தோசை சாப்பிடும் போதுமா போதுமான்னு கேக்குறாங்க!!!

😛 மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட, நாக்குக்கு நயமா சமைக்கிற பொண்ணுதான் ஆண்களுக்கு தேவை!

😛 சுடுகாடு சுடுகாடுன்னு கேவலமா பேசதீங்க. அங்க போறதுக்கு அவனவன் செத்துட்டு இருக்கான்!

😛 ரேஷன் கார்டு போட்டோ 15 வருஷத்துக்கு முன்ன நம்ம எப்படி இருந்தோம்னு காட்டுது...! ஆதார் கார்டு 15 வருஷத்துக்கு அப்புறம் எப்படியிருப்போம்னு காட்டுது!

😛 வீட்டுக்குள்ளே புருஷனை வெளு வெளுன்னு வெளுத்தாலும், வெளியில் புருஷனுக்கு பயப்படுற மாதிரி நடிக்குறதுல, தமிழச்சிகளை அடிச்சிக்க முடியாது!!!
----------------------------------------------------
பரிசளிக்க விரும்பினால்...!!
----------------------------------------------------
🎁 உன் பகைவனுக்கு மன்னிப்பை பரிசளி..

🎁 உன் குழந்தைக்கு நல்ல நடத்தையை பரிசளி..

🎁 உன் மனைவிக்கு நல்ல தன்மையை பரிசளி..

🎁 உன் தந்தைக்கு மரியாதையை பரிசளி..

🎁 உன் தாய்க்கு பெருமையை பரிசளி..

🎁 உன் நண்பனுக்கு உன் உள்ளத்தை பரிசளி..

🎁 உன் மனசாட்சிக்கு நம்பிக்கையை பரிசளி..

🎁 உன் உறவுகளுக்கு உன் உணர்வை பரிசளி..

🎁 உன் சகோதரனுக்கு நேசத்தை பரிசளி..

🎁 எல்லா மனிதரிடமும் தாராள குணத்தை பரிசளி..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக