சருமத்தில் உள்ள செபாசியஸ் சுரப்பிகள் (sebaceous glands) அதிகப்படியான சீபத்தை (sebum)உருவாக்கும் போது எண்ணெய் சருமம் அதாவது ஆய்லி ஸ்கின் (oily skin) ஏற்படுகிறது. sebum என்பது உடலின் செபாசியஸ் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் அல்லது மெழுகு போன்ற பொருள். இது நம் சருமத்தை கோட் செய்கிறது, ஈரப்பதமாக்குகிறது மற்றும் பாதுகாக்கிறது.
இந்த sebum தேவைக்கு அதிகமாக சுரக்கும் போது ஒருவருடைய சருமம் oily skin சிக்கலை எதிர்கொள்கிறது. சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க sebum இன்றியமையாதது. இருப்பினும் அதிகப்படியான sebum எண்ணெய் சருமம் , க்ளாக்ட் போர்ஸ் (அடைபட்ட துளைகள்) மற்றும் முகப்பரு ஏற்பட வழிவகுக்கும். தவிர ஒயிட்ஹெட்ஸ் மற்றும் பிளாக்ஹெட்ஸ் ஆகியவை எண்ணெய் சருமத்தால் ஏற்படும் விளைவுகளில் சில.
உங்கள் சருமம் இயற்கையாக உற்பத்தி செய்யும் எண்ணெய்யின் அளவு பெரும்பாலும் மரபணு, மன அழுத்தம், உணவு மற்றும் உடலில் உள்ள ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் எண்ணெய் சருமம் கொண்டவர் என்றால் அதை எதிர்த்து போராடுவதற்கான வழிகள் இங்கே...
க்ளென்சிங்:
தினமும் காலை, மாலை மற்றும் உடற்பயிற்சிக்குப் பிறகு முகத்தை தவறாமல் கழுவுங்கள். சாஃப்டான மற்றும் ஆல்கஹால் அல்லாத ஆயில் ஃப்ரீ, ஃபோமிங் ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தவும். சாலிசிலிக் ஆசிட், கிளைகோலிக் ஆசிட், பென்சாயில் பெராக்சைடு ஆர்னியாசினமைடு போன்ற பொருட்கள் அடங்கிய தயாரிப்புகளை பயன்படுத்திய பிறகு முகத்தை கழுவும் போதும், மேக்கப்பை அகற்றும் போதும் உங்கள் சருமத்தை ஸ்க்ரப் செய்வதை தவிர்க்கவும். ஸ்க்ரப்பிங் செய்வது உங்கள் சருமத்தை எரிச்சலூட்டுவதுடன், எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும்.
மாய்ஸ்சரைஸ்:
உங்களது சருமம் ஆய்லி ஸ்கின்னாக இருந்தாலும், சருமத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்க மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியம். "ஆயில் ஃப்ரீ" மற்றும் "நான்காமெடோஜெனிக்" என்று குறிப்பிடப்பட்ட மாய்ஸ்சரைசரை தேர்வு செய்து பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
பாதுகாக்கவும்
வீட்டிற்குள் இருந்தாலும் சரி இருந்தாலும் சரி, வெளியே சென்றாலும் சரி தினமும் தவறாமல் சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். சுருக்கங்கள், ஏஜ் ஸ்பாட்ஸ் மற்றும் ஸ்கின் கேன்சருக்கு கூட வழிவகுக்கும் சூரிய சேதத்தை (sun damage) எதிர்த்து சன்ஸ்கிரீன் போராடுகிறது. முகப்பரு வெடிப்பதைத் தடுக்க ஜிங்க் ஆக்சைடு மற்றும் டைட்டானியம் டை ஆக்சைடு கொண்ட சன்ஸ்கிரீன்களை பயன்படுத்துங்கள். நறுமண எண்ணெய்களை கொண்ட சன்ஸ்கிரீன்களை பயன்படுத்த வேண்டாம்.
ஹெவி மேக்கப்பை தவிர்க்கவும்..
ஆயில் ஃப்ரீ, நீர் சார்ந்த அல்லது ஜெல் அடிப்படையிலான மேக்கப் பொருட்களை பயன்படுத்துங்கள். போட்டு கொண்ட மேக்கப்புடனே தூங்க செல்லாதீர்கள். தூங்க செல்வதற்கு முன் எப்போதும் அனைத்து மேக்கப்பையும் கலைத்து விடுங்கள்.
கைகளை கழுவாமல்..
உங்கள் முகத்தைத் தொட ஆசையாக இருந்தாலும் கைகளை கழுவாமல் அவ்வாறு செய்வதால் உங்கள் கைகளில் இருந்து அழுக்கு, எண்ணெய் மற்றும் பாக்டீரியாக்கள் உங்கள் முகத்தில் பரவி மேலும் முகப்பருவை உண்டாக்கும்.
News18 India
Latest News
ட்ரெண்டிங்
சினிமா
மீம்ஸ்
லைஃப்ஸ்டைல்
ரெசிபி
ஆல்பம்
வீடியோ
Live TV
மொழியைத் தேர்ந்தெடு :
தமிழ்(Tamil)(12 மேலும் மொழி)
Englishहिन्दी (Hindi)मराठी (Marathi)ગુજરાતી (Gujarati)ಕನ್ನಡ (Kannada)বাংলা (Bengali)മലയാളം (Malayalam)తెలుగు (Telugu)ਪੰਜਾਬੀ (Punjabi)اردو (Urdu)অসমীয়া (Assamese)ଓଡ଼ିଆ (Odia)
திரும்பிச் செல்லுங்கள்
Latest News
தமிழ்நாடு
வெப் ஸ்டோரீஸ்
பொழுதுபோக்கு
லைஃப்ஸ்டைல்
ராசிபலன்
வேலைவாய்ப்பு
ட்ரெண்டிங்
மீம்ஸ்
இந்தியா
உலகம்
குற்றம்
ஐபிஎல் 2022
விளையாட்டு
தொழில்நுட்பம்
ஆட்டோமொபைல்ஸ்
ஆன்மிகம்
வணிகம்
கல்வி
சிறப்புக் கட்டுரைகள்
Explainers
புகைப்படங்கள்
வீடியோக்கள்
எங்களைப் பற்றி
தொடர்புக்கு
விதிமுறைகள்
தள இணைப்புகள்
தண்ணீர் இயக்கம்
Netra Suraksha
HOME
/
NEWS
/
LIFESTYLE
/
ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் கோடைக்காலத்தில் சருமத்தை பராமரிக்க எளிய டிப்ஸ்..!

ஆயில் ஸ்கின்
ஆயில் ஸ்கின்
உங்கள் சருமம் இயற்கையாக உற்பத்தி செய்யும் எண்ணெய்யின் அளவு பெரும்பாலும் மரபணு, மன அழுத்தம், உணவு மற்றும் உடலில் உள்ள ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் தீர்மானிக்கப்படுகிறது.
NEWS18 TAMIL
LAST UPDATED: MAY 25, 2022, 15:55 IST
DIGITAL DESK
சருமத்தில் உள்ள செபாசியஸ் சுரப்பிகள் (sebaceous glands) அதிகப்படியான சீபத்தை (sebum)உருவாக்கும் போது எண்ணெய் சருமம் அதாவது ஆய்லி ஸ்கின் (oily skin) ஏற்படுகிறது. sebum என்பது உடலின் செபாசியஸ் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் அல்லது மெழுகு போன்ற பொருள். இது நம் சருமத்தை கோட் செய்கிறது, ஈரப்பதமாக்குகிறது மற்றும் பாதுகாக்கிறது.
இந்த sebum தேவைக்கு அதிகமாக சுரக்கும் போது ஒருவருடைய சருமம் oily skin சிக்கலை எதிர்கொள்கிறது. சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க sebum இன்றியமையாதது. இருப்பினும் அதிகப்படியான sebum எண்ணெய் சருமம் , க்ளாக்ட் போர்ஸ் (அடைபட்ட துளைகள்) மற்றும் முகப்பரு ஏற்பட வழிவகுக்கும். தவிர ஒயிட்ஹெட்ஸ் மற்றும் பிளாக்ஹெட்ஸ் ஆகியவை எண்ணெய் சருமத்தால் ஏற்படும் விளைவுகளில் சில.
உங்கள் சருமம் இயற்கையாக உற்பத்தி செய்யும் எண்ணெய்யின் அளவு பெரும்பாலும் மரபணு, மன அழுத்தம், உணவு மற்றும் உடலில் உள்ள ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் எண்ணெய் சருமம் கொண்டவர் என்றால் அதை எதிர்த்து போராடுவதற்கான வழிகள் இங்கே...
க்ளென்சிங்:
தினமும் காலை, மாலை மற்றும் உடற்பயிற்சிக்குப் பிறகு முகத்தை தவறாமல் கழுவுங்கள். சாஃப்டான மற்றும் ஆல்கஹால் அல்லாத ஆயில் ஃப்ரீ, ஃபோமிங் ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தவும். சாலிசிலிக் ஆசிட், கிளைகோலிக் ஆசிட், பென்சாயில் பெராக்சைடு ஆர்னியாசினமைடு போன்ற பொருட்கள் அடங்கிய தயாரிப்புகளை பயன்படுத்திய பிறகு முகத்தை கழுவும் போதும், மேக்கப்பை அகற்றும் போதும் உங்கள் சருமத்தை ஸ்க்ரப் செய்வதை தவிர்க்கவும். ஸ்க்ரப்பிங் செய்வது உங்கள் சருமத்தை எரிச்சலூட்டுவதுடன், எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும்.
மாய்ஸ்சரைஸ்:
உங்களது சருமம் ஆய்லி ஸ்கின்னாக இருந்தாலும், சருமத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்க மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியம். "ஆயில் ஃப்ரீ" மற்றும் "நான்காமெடோஜெனிக்" என்று குறிப்பிடப்பட்ட மாய்ஸ்சரைசரை தேர்வு செய்து பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
டிசைனர் பிரைடல் லெஹங்கா வாங்கப்போறீங்களா..? அதற்கு முன் இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க..!
பாதுகாக்கவும்..
வீட்டிற்குள் இருந்தாலும் சரி இருந்தாலும் சரி, வெளியே சென்றாலும் சரி தினமும் தவறாமல் சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். சுருக்கங்கள், ஏஜ் ஸ்பாட்ஸ் மற்றும் ஸ்கின் கேன்சருக்கு கூட வழிவகுக்கும் சூரிய சேதத்தை (sun damage) எதிர்த்து சன்ஸ்கிரீன் போராடுகிறது. முகப்பரு வெடிப்பதைத் தடுக்க ஜிங்க் ஆக்சைடு மற்றும் டைட்டானியம் டை ஆக்சைடு கொண்ட சன்ஸ்கிரீன்களை பயன்படுத்துங்கள். நறுமண எண்ணெய்களை கொண்ட சன்ஸ்கிரீன்களை பயன்படுத்த வேண்டாம்.
ஹெவி மேக்கப்பை தவிர்க்கவும்..
ஆயில் ஃப்ரீ, நீர் சார்ந்த அல்லது ஜெல் அடிப்படையிலான மேக்கப் பொருட்களை பயன்படுத்துங்கள். போட்டு கொண்ட மேக்கப்புடனே தூங்க செல்லாதீர்கள். தூங்க செல்வதற்கு முன் எப்போதும் அனைத்து மேக்கப்பையும் கலைத்து விடுங்கள்.
Emotional Eating என்றால் என்ன..? கட்டுப்படுத்தும் வழிகளை சொல்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர்...
கைகளை கழுவாமல்..
உங்கள் முகத்தைத் தொட ஆசையாக இருந்தாலும் கைகளை கழுவாமல் அவ்வாறு செய்வதால் உங்கள் கைகளில் இருந்து அழுக்கு, எண்ணெய் மற்றும் பாக்டீரியாக்கள் உங்கள் முகத்தில் பரவி மேலும் முகப்பருவை உண்டாக்கும்.
முடி பராமரிப்பு..
உங்கள் தலைமுடியை தவறாமல் சீரான இடைவெளியில் வாஷ் செய்யுங்கள். ஏனெனில் உங்கள் தலையில் இருக்கும் எண்ணெய் பசை குவிந்து முகப்பருவை உண்டாக்க கூடும்.
ஆரோக்கிய உணவும், போதுமான தண்ணீரும்..
தினமும் 2-2.5 லிட்டர் தண்ணீரை குடிப்பது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. அதே போல ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தலை பராமரிக்க சீரான மற்றும் ஆரோக்கிய உணவு எப்போதும் முக்கியமானது. தூங்கும் போது ஒரே தலையணை உறையை பயன்படுத்தாமல் 2 நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறையை மாற்றுவது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக