மக்களில் பலர் எண்ணற்ற காரணங்களால் தூக்கமிழந்து தவிக்கின்றனர். மனதில் இருக்கும் அதிகப்படியான கவலைகள் அல்லது தூக்கமின்மை பிரச்சனைகள் அல்லது இதர நோய்களின் எதிரொலியாக தூக்கம் கெட்டு விடுகிறது. சிலருக்கு படுத்த உடனே தூக்கம் வருவதில்லை என்ற பிரச்சினை இருக்கிறது. இன்னும் சிலர் பாதியில் முழிப்பு வந்து அவதி அடைபவர்களாக இருக்கின்றனர். இத்தகைய சூழலில், ஆழ்ந்த தூக்கம் வர வேண்டும் என்பதற்காக பலரும் தூக்க மாத்திரைகளை வாடிக்கையாக எடுத்துக் கொள்கின்றனர்.
மக்களில் பலர் எண்ணற்ற காரணங்களால் தூக்கமிழந்து தவிக்கின்றனர். மனதில் இருக்கும் அதிகப்படியான கவலைகள் அல்லது தூக்கமின்மை பிரச்சனைகள் அல்லது இதர நோய்களின் எதிரொலியாக தூக்கம் கெட்டு விடுகிறது. சிலருக்கு படுத்த உடனே தூக்கம் வருவதில்லை என்ற பிரச்சினை இருக

மேலும் வாசிக்க
1/ 7
மனதின் கவலைகளை போக்குகிறது : பொதுவாக தூக்க மாத்திரைகள் தூக்கத்திற்கான மருந்தாக மட்டும் வேலை செய்வதில்லை. அது மனதில் உள்ள அழுத்தம் மற்றும் கவலைகளை குறைப்பதாக அமைகிறது. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் முழுமையான தூக்கம் கிடைக்க இந்த மாத்திரைகள் உதவிகரமாக இருக்கின்றன என்ற போதிலும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் ஏராளம். குறிப்பாக, தூக்க மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ளவே கூடாது. அது மிக, மிக தவறு. அளவுக்கு மீறி தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் உயிரிழப்பு கூட ஏற்படலாம். அதே சமயம், மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் மாத்திரை எடுத்துக் கொண்டாலும் கூட, அதன் பக்க விளைவுகளை நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும்.

மிகுதியான சோர்வு :
தூக்க மாத்திரைகளை உட்கொண்டால் நீங்கள் எப்போதுமே மிகுந்த சோர்வாக காணப்படுவீர்கள். உங்கள் மூளையின் செயல்பாடுகளை இது பாதிக்கும். ஆகவே, தலை எப்போதுமே பாரமாக தெரியும். நீங்கள் தூங்காமல் இருக்கும் சமயத்திலும் கூட உங்கள் கண்கள் மூடிக் கொள்ளும்.
இயல்பான சுவாசத்தை பாதிக்கிறது :
நுரையீரல் நோய்கள் அல்லது மூச்சுப் பிரச்சனைகள் இருப்பவர்கள் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ள கூடாது. உங்களின் இயல்பான சுவாசத்தை இது பாதிக்கும். குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு பிரச்சனைகளை உண்டு செய்யும்.
அலர்ஜி :
தூக்க மாத்திரைகளை வாடிக்கையாக எடுத்துக் கொள்ளும் மக்களில் பலருக்கு தோல் அரிப்பு, நெஞ்சுவலி, குமட்டல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
இயல்பு வாழ்க்கை பாதிக்கும் :
நீண்ட காலம் தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள், அதற்கு அடிமையாக மாறி விடுவார்கள். மாத்திரையின்றி தூங்க முடியாது என்ற நிலைக்கு வந்து விடுவார்கள். இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கும். எப்போதுமே மயக்கம் வருவதைப் போன்ற உணர்வு ஏற்படும்.
கவனத்திறன் பாதிக்கும் :
மூளையின் செயல்பாடுகளை தூக்க மாத்திரை பாதிக்கும். இதனால், உங்களுக்கு நினைவு இழப்பு மற்றும் கவனச்சிதறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் இயல்பான விஷயங்கள் பலவற்றை மறக்க தொடங்கி விடுவீர்கள். அதுமட்டுமின்றி எதையுமே உங்களால் எளிதில் புரிந்து கொள்ள இயலாது.
அறிந்து கொள்வோம்
,
ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக