சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரணியூர் என்னும் ஊரில் அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சிவகங்கையிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் இரணியூர் என்னும் ஊர் உள்ளது. இரணியூரிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்திருக்கோயிலில் மூலவரான ஆட்கொண்டநாதர் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.
இரணியனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க சிவன் அருளிய தலம் என்பதால் இவ்வூர், 'இரணியூர்" என்று அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோயிலின் பிரகாரத்தில் முருகன் மயிலில் அமர்ந்திருப்பதும், அவருக்கு அருகில் இருக்கும் வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோர் மயில் வாகனங்களில் அமர்ந்திருப்பதும் காணக்கிடைக்காத காட்சி.
இக்கோயிலின் முன்மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சுவாமியையும், விமானத்தையும் தரிசிக்கும் விதமாக இத்திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
வேறென்ன சிறப்பு?
அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயிலில் அறுபது மற்றும் எண்பதாம் கல்யாணம் அதிகளவில் நடத்துகின்றனர்.
இங்கு குபேரன், வாயு பகவான் இருவரும் சுவாமியை வழிபட்டதாக ஐதீகம். இவர்கள் இருவரும் குதிரையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர்.
அம்பாள் சிவபுரந்தேவி இரண்டே கரங்களுடன், தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
கார்த்திகையில் சம்பக சஷ்டி, திருவாதிரை, சிவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
கார்த்திகை மாதத்தில் ஆறு நாட்களும் உற்சவமூர்த்தி பைரவர் மூலஸ்தானத்திற்குள் எழுந்தருளி, பின்பு பல்லக்கில் புறப்பாடாகிறார்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
பணி, வியாபாரம், தொழில் சிறக்க இத்திருக்கோயிலில் வேண்டிக் கொள்கிறார்கள்.
கோபமான குணம் உள்ளவர்கள் இத்தலத்திலுள்ள சிவன் மற்றும் பைரவரை வழிபட கோபம் குறையும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயிலில் வேண்டியவை நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், பைரவருக்கு வடை மாலை சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக