கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
-------------------------------------------------------------
👩 வங்கி மேலாளரிடம் ஒரு பெண் லோன் கேட்டு வந்தார்.
👮 மேலாளர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார்.
👮 'எதுக்காகப் பணம் வேணும்...?"
👩 அந்த பெண் பதில் சொன்னார். 'கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்...!"
👮 'அடமானமாய் என்ன தருவீங்க...?"
👩 அந்த பெண்... லேசாய் குழப்பத்துடன் கேட்டார். 'அடமானம்னா என்ன..?"
👮 'நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தா தான் பேங்க் பணம் கொடுக்கும். அதைதான் அடமானம்னு சொல்லுவோம்...!"
👩 அந்த பெண் சொன்னார்... 'கொஞ்சம் நிலம் இருக்கு... ரெண்டு குதிரை இருக்கு... எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்...!".
👮 மேலாளர் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தார்.
👩 சில மாதங்கள் கழிந்தது. அந்த பெண் மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்.
👩 பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.
👮 மேலாளர் ஆச்சரியத்துடன்...
👮 'கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா...?"
👩 அந்த பெண் உற்சாகமாய் பதில் சொன்னார்.
👩 'லாபம் இல்லாமலா...? அது கிடைச்சது நிறைய...!".
👮 மேலாளர் ஆர்வத்துடன் கேட்டார்.
👮 'அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?"
👩 'என்ன செய்யறது... பொட்டில போட்டு வெச்சிருக்கேன்...!".
👮 மேலாளர் யோசித்தார். 'இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக இந்த பெண் கிடைச்சுட்டாள்...!" என்று நினைத்தபடியே 'ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே...?" என்றார்.
👩 அந்த பெண் கேட்டார். 'டெபாசிட்னா என்ன...?"
👮 மேலாளர் விளக்கமாய் பதில் சொன்னார்.
👮 'நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு... அதில உங்க பணத்தை போட்டு வச்சா... உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பாத்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்...!"
👩 கேட்டுக் கொண்டிருந்த அந்த பெண் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.
👩 'அடமானமாய் என்ன தருவீங்க?" 😎😎😇😇
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக