கனடாவைச் சேர்ந்த பிரபல பாப் படகர் ஜஸ்டீன் பைபர். இவர் மை வோர்ட்( MY world) என்ற ஆல்பம் மூலம் புகழடைந்தார். அந்த ஆல்பத்தில் இடம்பெற்ற பேபி என்ற பாடல் பைபரை உலகம் முழுவதும் சென்றடைய வைத்தது. தொடர்ந்து பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டு புகழடைந்த ஜஸ்டீன் பைபர், இசை சுற்றுலாவும் நடத்தி வந்தார். இந்தியாவிலும் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளை அவர் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், Ramsay Hunt syndrome மூலம் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தனது ஒருபகுதி முகத்தில் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த வைரஸால் தான் எனது காது மற்றும் முக நரம்புகளை தாக்கி முகத்தை செயலிழக்கச் செய்து விட்டது.
இந்த கண்ணால் இமைக்க முடியவில்லை. இந்த பக்கத்தில் என்னால் சிரிக்க முடியவில்லை. ந்த மூக்கு துவாரம் நகராது. எனது முகத்தில் இந்த பக்கம் முழுவதும் செயலிழந்துவிட்டது’ என ஜஸ்டீன் பைபர் கூறியுள்ளார்
முக பக்கவாதம் ஏற்பட்டுள்ளதால் பாடுவதில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்துகொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.
அக்டோபர் மாதம் ஜஸ்டீன் பைபர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. தற்போது அதற்குள் அவர் குணமடைவாரா என தெரியவில்லை.
ராம்சே ஹன்ட் நோய்க்குறி என்றால் என்ன:
இது சின்னம்மைக்கும் வழிவகுக்கும் வைரஸ்தான் இந்த நோயையும் ஏற்படுத்துகிறது. ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் காது, முகத்தில் அல்லது உதடுகளைச் சுற்றி வலிமிகுந்த சொறி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
மவுண்ட் சினாய் அமைப்பின் கூற்றுப்படி, வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் தலையில் உள்ள ஒரு நரம்பை பாதிக்கும்போது இது நிகழ்கிறது.
வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் சிக்கன் பாக்ஸ் மற்றும் சிங்கிள்ஸை ஏற்படுத்துகிறது. இந்த நோய்க்குறி உள்ளவர்களுக்கு உள் காதுக்கு அருகில் உள்ள முக நரம்பை வைரஸ் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
இது நரம்பு எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. பெரியவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது அரிதான சந்தர்ப்பங்களில் குழந்தைகளில் காணப்படுகிறது.
காதில் எப்போதும் வலி , ஒரு பக்கம் காது கேளாமை. முகத்தில் ஒரு பக்கம் வலி - இதன் காரணமாக கண், வாய் போன்றவற்றை அசைக்க முடியாது ஆகியவை அறிகுறிகள் ஆகும்.
வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸிற்கான இரத்தப் பரிசோதனைகள், தலையின் எம்ஆர்ஐ மற்றும் சில தோல் பரிசோதனைகள் ராம்சே ஹன்ட் நோய்க்குறியைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன.
நோயாளிகளுக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள்சிகிச்சையாக வழங்கப்படுகின்றன. கார்னியல் சேதத்தைத் தடுக்க கண் பேட்ச்சஸ் அணிய நோயாளிகளை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக