இன்றைய காலகட்டத்தில் ரயில்களில் ஒரு முறையாவது பயணம் செய்யாதவர்கள் இருக்க முடியாது.
ஏனென்றால் செல்வந்தர்கள் மற்றும் தேவையின் கருதி வெகு தொலைவு செல்கின்ற மக்களுக்கான போக்குவரத்து சேவைகளாக விளங்கும் விமானங்களைப் போல அல்லாமல், ஜனரஞ்சக மக்களும் பயணம் செய்யும் வகையில் குறைவான கட்டணத்தில் இயங்கக் கூடியது ரயில்கள் ஆகும்.
மேலும் நம்மைச் சேர்ந்த பகுதிகளுக்கு அருகாமையில் இருந்தே இயங்குவதால் ரயில்களை யாருமே பயன்படுத்தாமல் இருக்க முடியாது.
ரயிலோடு நமக்கு இவ்வளவு பரீட்சையம் இருந்தாலும், ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள அடையாள குறியீடுகள் குறித்து பெரும்பாலும் பலருக்கு தெரிவதில்லை.
ரயில்களை ஓட்டும் லோகோ பைலட்டுகள் மற்றும் ரயில்வே பணியாளர்கள் மட்டுமே தெரிந்து வைத்துள்ள அந்த அடையாளக் குறியீடுகளின் அர்த்தங்களை நாமும் தெரிந்து கொள்ளலாம்.
இந்தக் குறியீடுகள் ரயில்வே பணியாளர்களுக்கானவை என்றாலும் கூட, நாம் ரயில்களில் பயணம் செய்யும்போது எதனால் ரயில்களின் வேகம் குறைக்கப்படுகிறது மற்றும் நிறுத்தப்படுகிறது போன்ற பொதுவான தகவல்களை புரிந்து கொள்ள நமக்கு இது உதவிகரமாக இருக்கும்.
ரயில்களில் பயணம் செய்யும்போது ரயில் தடங்களின் பக்கவாட்டில் கீழ்காணும் குறியீடுகள் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.
W/L மற்றும் C/FA என்ற குறியீட்டுடன் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.
இதில் உள்ள எழுத்துக்கள் மஞ்சள் நிறத்தில் நம் கண்களுக்கு தெளிவாகத் தெரியும் படி குறிப்பிடப்பட்டிருக்கும்.
ரயில்வே கிராசிங் பகுதிகளில் ஒலி எழுப்ப வேண்டும் என்பதற்கான அடையாளக் குறியீடுகள் தான் இவை.
W/L என்பதன் அர்த்தம் Whistle for Level Crossing என்பதாகும்.
C/FA என்பது இதே அர்த்தத்தை தரக்கூடிய ஹிந்தி எழுத்துக்களின் சுருக்கமாகும். ஆளில்லா கடவுப் பாதைகள் வர இருக்கின்றன என்பதற்கான குறியீடுகள் இவை.
ஆளில்லா கடவுப் பாதைகளுக்கு 250 மீட்டர் தொலைவுக்கு முன்பே இந்த போர்டுகள் வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து ஒலி எழுப்பியவாறு ரயில்களை இயக்குவார்கள்.
W/B என்றால் என்ன?
Whistle/ Bridge என்பதன் சுருக்கம் W/B ஆகும். சிறிது தொலைவில் பாலம் அமைந்திருக்கிறது என்பதை குறிக்கும் வகையில் இந்த குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதைப் பார்க்கும் லோகோ பைலட்டுகள் ரயில்களின் வேகத்தை குறைத்து இயக்குவார்கள்.
T/P அல்லது T/G என்ற குறியீடுகள் இருப்பதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். இவை ரயில்களை வேகமாக இயக்குவதற்கான பகுதி முடிந்து விட்டது என்பதற்கான குறியீடுகள் ஆகும்.
இதேபோல துதிக்கையில் பச்சை விளக்கு ஏந்திய யானை சின்னம் அல்லது வரைபடம் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது இந்திய ரயில்வேயின் பிராண்ட் சின்னமாகும். இந்த பொம்மையும் சிக்னல் தருகின்ற பணியாளர் போல கருதப்படுகிறது.
இந்திய ரயில்வே அமைந்து 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு கடந்த 2003 ஆம் ஆண்டு இந்த பிராண்ட் சின்னம் உருவாக்கப்பட்டது.
அறிந்து கொள்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக