சிலரது உள்ளங்கைகள் மிகவும் கரடுமுரடாகவும், மிகவும் வறண்டும் காணப்படும். இதற்கு காரணம் வறட்சியை ஏற்படுத்தும் சோப்பு அல்லது உங்கள் சருமத்திற்கு பொருந்தாத சில கெமிக்கல் அடங்கிய தயாரிப்புகளை பயன்படுத்துவதாக இருக்கலாம்.
அதே போல தொற்று நீடிப்பதால் சிலர் அடிக்கடி கழுவுவது மற்றும் சுத்தப்படுத்துவது போன்ற பழக்கத்தை கடைபிடிப்பதால் கைகள் வறண்டு, வெடிப்புகள் ஏற்படுகின்றன. காரணம் எதுவாக இருந்தாலும் சருமம் மற்றும் கைகளை ஹைட்ரேட்டாக வைத்திருக்க பல வழிகள் உள்ளன. வறண்ட மற்றும் வெடிப்புகள் நிறைந்த கைகளை சரி செய்ய பல அழகுசாதன பொருட்கள் இருந்தாலும் இவற்றில் பெரும்பாலானவற்றில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் உள்ளன. எனவே இயற்கையாக கைகள் மற்றும் சருமத்தை மென்மையாக்கும் பொருட்களை தேர்வு செய்வது பயன்படுத்துவது நல்லது. கரடுமுரடான மற்றும் வறண்ட கைகளை சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள்...
தேன்:
வறண்ட மற்றும் வெடிப்புகள் நிறைந்த கைகளை சரி செய்வதற்கான மிகவும் பயனுள்ள இயற்கை வீட்டு வைத்தியம் தேன். இது ஒரு இயற்கையான மாய்சரைசிங் எஃபெக்டை கொண்டுள்ளது. மேலும் தேன் ஆன்டிமைக்ரோபியல் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளை கொண்டுள்ளது. சிறிதளவு தேனை உங்கள் கைகளில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவலாம். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வாழைப்பழங்கள்:
கரடுமுரடான கைகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறந்த வீட்டு வைத்திய பொருள் வாழைப்பழங்கள். இவை சரும சுருக்கங்களை நீக்க உதவுகிறது. ஒரு பெரிய அல்லது 2 சிறிய பழுத்த வாழைப்பழத்தை எடுத்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின் கைகள் முழுவதும் அதை தேய்த்த பிறகு சுமார் 30 நிமிடங்கள் காய வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவவும்.
கற்றாழை:
கரடுமுரடான மற்றும் தோலுரிந்த கைகளுக்கு ஏற்றது கற்றாழை. அலோவேரா ஜெல் என்பது இயற்கையான மாய்ஸ்சரைசர். இதன் ஜெல்லில் உள்ள என்சைம் வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் சருமத்தை சரி செய்கிறது. வீட்டிலும் கற்றாழையை எளிதாக வளர்க்கலாம். கற்றாழையில் இருந்து அதன் ஜெல்லை பிரித்தெடுத்து பாதிக்கப்பட்ட கைகளில் தடவி, அரை மணி நேரம் விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
தேங்காய் எண்ணெய்:
கரடுமுரடான கைகளுக்கு சிகிச்சை அளிக்க கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் அதிகம். இது சேதமடைந்த மற்றும் வறண்ட சருமத்திற்கு சிகிச்சையளிக்க பெரிதும் உதவும். உறங்க செல்வதற்கு முன், தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு கைகளை மசாஜ் செய்வது நல்ல பலனை தரும்.
எலுமிச்சை ஜூஸ்:
எலுமிச்சை ஜூஸ் வறண்ட கைகளை மென்மையாக்க உதவும். எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா மற்றும் தேன் உள்ளிட்ட பொருட்களை சம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து பாதிக்கப்பட்ட கைகள் மற்றும் சருமத்தில் தடவி 5 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யலாம். பின் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவி கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக