ஆட்டு மூளை -2
சின்ன வெங்காயம் - 200 கிராம் வரமிளகாய் - 5
சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
பெப்பர் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்-1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை :
மூளைகளை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வெது வெதுப்பான நல்ல தண்ணீரில் இரண்டு மூன்று முறை நன்கு கழுவி சுத்தமாக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நீர் ஊற்றி அது கொதிக்க துவங்கியதும், மூளையை அதில் போட்டு 5 நிமிடங்கள் வேகவிட்டு வெந்த மூளையை எடுத்து தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு அதில் 5 வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு நன்கு வதக்கவும். இது வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
பிறகு இதில் சீரகத் தூள், மிளகாய்த்தூள், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசம் போக 3 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு வெந்த மூளையை இதில் போட்டு தேவையான உப்பு சேர்த்து மூளையை நசுக்காது நன்கு கலந்து பாத்திரத்தை மூடி வைத்து அடுப்பை சிம்மில் வைத்து 5நிமிடங்கள் வேகவிடவும்.
5 நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து அடுப்பை கொஞ்சம் கூட்டி எரிய விட்டு மூளையை நன்கு பிரட்டவும் இது போல 3முதல் 5 நிமிடங்கள் பிரட்டி அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
ருசியான மூளை ரோஸ்ட் தயார். இதை பெப்பர் தூவி பரிமாறவும். ஹை கொலஸ்டிரால் உணவு இது!
குறிப்புகள் :
காரம் தேவையெனில் 2 வரமிளகாய் அதிகம் சேர்க்கவும்.
ஆயில் நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தவும்.
மூளை வறுவலுக்கு சின்ன வெங்காயம் மட்டுமே உபயோகிக்கவும். பெரிய வெங்காயத்தில் ருசி கொஞ்சம் மந்த மூளை போல.
கடைசியாக கிளறும் போது நீங்கள் எவ்வளவு மென்மையாக கிளறினாலும் வெந்த மூளை உதிரும்.
அதைப்பற்றி கவலை இல்லாது மென்மையாக கிளறவும். அழுத்தி உடைத்துவிட வேண்டாம்.
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக