புரட்டாசி 25 - வியாழக்கிழமை
🔆 திதி : இரவு 08.59 வரை திரியோதசி பின்பு சதுர்த்தசி.
🔆 நட்சத்திரம் : பிற்பகல் 01.31 வரை பூரம் பின்பு உத்திரம்.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.04 வரை அமிர்தயோகம் பின்பு பிற்பகல் 01.31 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 அவிட்டம், சதயம்
பண்டிகை
🌷 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள் கோவிலில் ஸ்ரீராமருக்கு திருமஞ்சன சேவை.
வழிபாடு
🙏 சிவபெருமானை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 சிவராத்திரி
💥 பிரதோஷம்
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 உழவு செய்வதற்கு நல்ல நாள்.
🌟 சிலைகளை வடிவமைப்பதற்கு ஏற்ற நாள்.
🌟 செடி, கொடி, மரம் நடுவதற்கு உகந்த நாள்.
🌟 நாட்டிய பயிற்சி மேற்கொள்வதற்கு சிறந்த நாள்.
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 06.10 PM முதல் 07.53 PM வரை
ரிஷப லக்னம் 07.54 PM முதல் 09.56 PM வரை
மிதுன லக்னம் 09.57 PM முதல் 12.07 AM வரை
கடக லக்னம் 12.08 AM முதல் 02.16 AM வரை
சிம்ம லக்னம் 02.17 AM முதல் 04.19 AM வரை
கன்னி லக்னம் 04.20 AM முதல் 06.25 AM வரை
துலாம் லக்னம் 06.26 AM முதல் 08.32 AM வரை
விருச்சிக லக்னம் 08.33 AM முதல் 10.43 AM வரை
தனுசு லக்னம் 10.44 AM முதல் 12.51 PM வரை
மகர லக்னம் 12.52 PM முதல் 02.44 PM வரை
கும்ப லக்னம் 02.45 PM முதல் 04.26 PM வரை
மீன லக்னம் 04.27 PM முதல் 06.05 PM வரை
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
இன்றைய ராசி பலன்கள்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மேஷம்
போட்டி நிறைந்த நாளாக அமையவிருக்கும் மேஷ ராசி அன்பர்களே.. வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவி கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். பணவரவுகள் மேம்படும். புதிய வாய்ப்புகள் நாடி வரும். இன்று உங்களுக்கு மேற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 9ம் எண் சிந்தித்துச் செயலாற்றுவதையும், நீலநிறம் உங்கள் மீதான நம்பிக்கையையும் மேம்படுத்தும்.
அஸ்வினி : அலுவலக பணிகளில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கிடைக்கும்.
பரணி : பிள்ளைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும்.
கிருத்திகை : வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் விலகும்.
---------------------------------------
ரிஷபம்
புகழ் நிறைந்த நாளாக அமையவிருக்கும் ரிஷப ராசி அன்பர்களே.. புரியாத சில விஷயங்கள் எளிதில் புரியும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு தெற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 5ம் எண் சொல் வல்லமையையும், வெளிர் சிவப்பு நிறம் மனதளவில் துணிவையும் உருவாக்கும்.
கிருத்திகை : தந்தைவழி உறவினர்களால் சில உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிருகசீரிஷம் : யாரையும் குறை கூற வேண்டாம்.
---------------------------------------
மிதுனம்
தன்னம்பிக்கை வேண்டிய நாளாக அமையவிருக்கும் மிதுன ராசி அன்பர்களே.. பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். சொந்த பந்தங்களின் சந்திப்பு ஏற்படும். எதிர்பாராத சில செய்திகளால் கையிருப்புகள் குறையும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 3ம் எண் எளிமையான சிந்தனைகளையும், மஞ்சள் நிறம் தன்னம்பிக்கையையும் மேம்படுத்தும்.
மிருகசீரிஷம் : வியாபாரத்தில் கவனத்துடன் செயல்படவும்.
திருவாதிரை : நெருக்கமானவர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும்.
புனர்பூசம் : உத்தியோகத்தில் சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
---------------------------------------
கடகம்
லாபம் நிறைந்த நாளாக அமையவிருக்கும் கடக ராசி அன்பர்களே.. மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். அரசு வகையில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். இன்று உங்களுக்கு வடகிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 2ம் எண் பாச உணர்வுகளையும், வெளிர் பச்சை நிறம் சமநிலையினையும் உருவாக்கித் தரும்.
புனர்பூசம் : மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் இருக்கவும்.
பூசம் : உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும்.
ஆயில்யம் : தொழிலில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஆதாயம் நிறைந்த நாளாக அமையவிருக்கும் சிம்ம ராசி அன்பர்களே.. சொன்னதைச் செயல் வடிவில் மாற்றுவீர்கள். மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் மேம்படும். தொழில் சார்ந்த உதவிகள் சாதகமாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு தெற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 1ம் எண் மனதில் தன்னம்பிக்கையையும், சிவப்பு நிறம் புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
மகம் : கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும்.
பூரம் : ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
உத்திரம் : குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
விவேகம் வேண்டிய நாளாக அமையவிருக்கும் கன்னி ராசி அன்பர்களே.. விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற கருத்துகளைத் தவிர்க்கவும். கொள்கைப் பிடிப்பு குணம் அதிகரிக்கும். நண்பர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு மேற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 5ம் எண் துரித உணர்வுகளையும், பொன் நிறம் அமைதியான சூழலையும் அமைத்துத் தரும்.
உத்திரம் : வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும்.
அஸ்தம் : சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் ஏற்படும்.
சித்திரை : சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
துலாம்
நிம்மதி நிறைந்த நாளாக அமையவிருக்கும் துலாம் ராசி அன்பர்களே.. எதிர்மறையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பொறுமையைக் கையாளவும். சக ஊழியர்களால் ஆதரவின்மையான சூழல் உண்டாகும். இன்று உங்களுக்கு வடக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 9ம் எண் சாதனை சிந்தனைகளையும், இளம் மஞ்சள் நிறம் புரிதல் தன்மையையும் அதிகப்படுத்தும்.
சித்திரை : நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும்.
சுவாதி : பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
விசாகம் : ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும்.
---------------------------------------
விருச்சிகம்
தெளிவு நிறைந்த நாளாக அமையவிருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே.. பிரபலமானவர்களின் தொடர்பு கிடைக்கும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான சூழல் உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலைகள் நிலவும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 3ம் எண் சுக அனுபவத்தையும், ஊதா நிறம் செல்வச் சேர்க்கைக்கான சூழலையும் உருவாக்கித் தரும்.
விசாகம் : வீட்டைச் சீரமைப்பதற்கான சூழல் அமையும்.
அனுஷம் : விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
கேட்டை : பணிபுரியும் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும்.
---------------------------------------
தனுசு
அனுபவம் மேம்படும் நாளாக அமையவிருக்கும் தனுசு ராசி அன்பர்களே.. பெரியோர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். அரசு வழியில் உதவிகள் சாதகமாகும். கொடுக்கல், வாங்கலில் முயற்சிக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். இன்று உங்களுக்கு தெற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 8ம் எண் வாணிக மேன்மையையும், மஞ்சள் நிறம் வளர்ச்சி குறித்த சிந்தனைகளையும் மேம்படுத்தும்.
மூலம் : எதிர்பாராத வகையில் வரவுகள் உண்டாகும்.
பூராடம் : அக்கம்-பக்கம் இருப்பவர்களுடன் அளவுடன் இருக்கவும்.
உத்திராடம் : சவாலான காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.
---------------------------------------
மகரம்
நிதானம் வேண்டிய நாளாக அமையவிருக்கும் மகர ராசி அன்பர்களே.. குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வேலையாட்களால் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 6ம் எண் விவேகத்தையும், அடர் பச்சை நிறம் புதுமை குறித்த எண்ணங்களையும் விதைக்கும்.
உத்திராடம் : எதிர்கால முன்னேற்றம் குறித்து யோசிப்பீர்கள்.
திருவோணம் : பிரச்சனைகளை விவேகத்துடன் கையாளவும்.
அவிட்டம் : உறவுகளின் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும்.
---------------------------------------
கும்பம்
நட்பு நிறைந்த நாளாக அமையவிருக்கும் கும்ப ராசி அன்பர்களே.. உடனிருப்பவர்களிடம் கனிவு வேண்டும். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படவும். எதிராக இருந்தவர்களின் பலம் குறையும். மனதில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். இன்று உங்களுக்கு வடக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 4ம் எண் கடமை உணர்வுகளையும், இளநீல நிறம் எண்ண ஓட்டத்தைச் சீராக்கி மனதினை சாந்தப்படுத்தும்.
அவிட்டம் : எதிலும் குழப்பத்துடனே செயல்படுவீர்கள்.
சதயம் : வியாபாரப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும்.
பூரட்டாதி : மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும்.
---------------------------------------
மீனம்
மாற்றம் நிறைந்த நாளாக அமையவிருக்கும் மீன ராசி அன்பர்களே.. வாழ்க்கைத் துணைவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும். பொறுப்புகள் வழங்குவதில் சிந்தித்துச் செயல்படவும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 3ம் எண் நிதானத்தையும், ஊதா நிறம் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் தரும்.
பூரட்டாதி : உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைத் தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : சகோதரர்களின் வழியில் ஒற்றுமை மேம்படும்.
ரேவதி : மனதளவில் சஞ்சலங்கள் தோன்றி மறையும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக