ஐப்பசி 4 - சனிக்கிழமை
🔆 திதி : இரவு 07.41 வரை சப்தமி பின்பு அஷ்டமி.
🔆 நட்சத்திரம் : மாலை 06.33 வரை பூராடம் பின்பு உத்திராடம்.
🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 மிருகசீரிஷம், திருவாதிரை
பண்டிகை
🌷 திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் கோவர்த்தனாம்பிகைக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்கார காட்சி.
🌷 குச்சனூர் ஸ்ரீசனிபகவானுக்கு அபிஷேக ஆராதனை.
🌷 குலசேகரப்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் பூச்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்தில் காட்சியருளல்.
🌷 மதுரை மீனாட்சி கொலு மண்டபத்தில் கொலு அலங்காரத்துடன் காட்சியருளல்.
வழிபாடு
🙏 கன்னிமார்களை வழிபட குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும்.
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 கால்நடைகள் வாங்குவதற்கு நல்ல நாள்.
🌟 நவரத்தினங்கள் வாங்குவதற்கு நல்ல நாள்.
🌟 மந்திர உபதேசம் பெறுவதற்கு உகந்த நாள்.
🌟 கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கு சிறந்த நாள்.
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 05.35 PM முதல் 07.18 PM வரை
ரிஷப லக்னம் 07.19 PM முதல் 09.20 PM வரை
மிதுன லக்னம் 09.21 PM முதல் 11.32 AM வரை
கடக லக்னம் 11.33 PM முதல் 01.41 AM வரை
சிம்ம லக்னம் 01.42 AM முதல் 03.44 AM வரை
கன்னி லக்னம் 03.45 AM முதல் 05.46 AM வரை
துலாம் லக்னம் 05.47 AM முதல் 07.56 AM வரை
விருச்சிக லக்னம் 07.57 AM முதல் 10.08 AM வரை
தனுசு லக்னம் 10.09 AM முதல் 12.15 PM வரை
மகர லக்னம் 12.16 PM முதல் 02.09 PM வரை
கும்ப லக்னம் 02.10 PM முதல் 03.50 PM வரை
மீன லக்னம் 03.51 PM முதல் 05.30 PM வரை
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
இன்றைய ராசி பலன்கள்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மேஷம்
குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாகும். வாகன பழுதுகளைச் சீர் செய்வீர்கள். வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். அலுவலகப் பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். தெளிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அஸ்வினி : உதவிகள் சாதகமாகும்.
பரணி : துரிதத்துடன் செயல்படுவீர்கள்.
கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
எதிலும் அவசரமின்றி செயல்படவும். பயனற்ற அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். உறவுகளிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு மாற்றத்தை உருவாக்கும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
ரோகிணி : விவேகத்துடன் செயல்படவும்.
மிருகசீரிஷம் : மாற்றம் பிறக்கும்.
---------------------------------------
மிதுனம்
சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர் வழியில் ஆதரவு ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் விவேகம் வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உதவி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : ஆதரவு ஏற்படும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
---------------------------------------
கடகம்
உங்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களின் வருகை உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். ஒப்பந்தப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : மதிப்பு அதிகரிக்கும்.
பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : ஈடுபாடு ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கான சூழல் அமையும். இழுபறியான பணிகளைத் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பண விவகாரங்களில் நாணயத்தோடு செயல்படுவீர்கள். வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சல்கள் உண்டாகும். உறவுகளின் வழியில் புரிதல் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
மகம் : துரிதம் உண்டாகும்.
பூரம் : நாணயம் வெளிப்படும்.
உத்திரம் : புரிதல் ஏற்படும்.
---------------------------------------
கன்னி
உறவினர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
துலாம்
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, மனை விற்பனையில் லாபம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்களைப் புரிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் நம்பிக்கையும், மதிப்பும் மேம்படும். மனதளவில் புதிய தைரியம் உண்டாகும். பொறுமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சுவாதி : ரகசியங்களை அறிவீர்கள்.
விசாகம் : தைரியம் பிறக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். தடைபட்ட வேலைகள் முடிவு பெறும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். அலுவலகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்படும். பரிசு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : குழப்பம் நீங்கும்.
அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கால்நடைகளிடம் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் விவேகத்துடன் முடிவெடுப்பது நல்லது. நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : சிந்தனைகள் மேம்படும்.
பூராடம் : தேடல் பிறக்கும்.
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
---------------------------------------
மகரம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளிடத்தில் அன்புடன் இருக்கவும். கோப்புகளைக் கையாளுவதில் கவனம் வேண்டும். வியாபாரப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். பழைய விஷயங்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்களால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவோணம் : விவேகத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
---------------------------------------
கும்பம்
வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மாற்றம் ஏற்படும். ஆடம்பரத்தைக் குறைத்துச் சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். பிரதிவாதங்களில் சமநிலை அறிந்து செயல்படவும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பரிசு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : சேமிப்பை மேம்படுத்துவீர்கள்.
பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.
---------------------------------------
மீனம்
குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். மனதளவில் ஒருவிதமான திருப்தி ஏற்படும். குடும்பத்தினரிடம் பொழுதுகளைச் செலவு செய்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபகரமான சூழல் உண்டாகும். வாகன வசதிகள் அதிகரிக்கும். பேராசை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆதரவான நாள்.
ரேவதி : வசதிகள் அதிகரிக்கும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக