முருங்கைக்கீரை- 1 கப்
எண்ணெய்- 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 3
துருவிய தேங்காய் 1 கப்
உப்பு தேவைக்கேற்ப
புளி 1 சிறிய துண்டு
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை
முதலில் சுத்தம் செய்த முருங்கைக்கீரையை நீரில் கழுவி, அதை ஒரு துணியில் போட்டு உலர்த்த வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு முருங்கைக் கீரையை சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
அடுத்து, அதில் துருவிய தேங்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் புளியை சேர்த்து கிளறி, இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான மற்றும் சத்தான முருங்கைக்கீரை துவையல் தயார்
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக