Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 அக்டோபர், 2023

உண்மைகள் மறைக்கப்பட்டு போலியாக எழுதப்பட்ட இந்திய வரலாறு

1.அலெக்சாண்டரை புருஷோத்தமன் போரில் வென்றதையும் பஞ்சாப் தாண்டி இந்தியாவினுள் நுழைய முடியாமல் திருப்பி அனுப்பியதையும் வரலாறு எழுதவில்லை. புருஷோத்தமன் போரில் தோற்றாலும் அலெக்சாண்டர் நாட்டை திருப்பி கொடுத்தாராம் . அப்படி எத்தனை நாட்டை அலெக்சாண்டர் அந்த அரசர்களுக்கே திருப்பி கொடுத்தார்? போகும் வழியில் கொல்லப்பட்ட அலக்சாண்டரை நோய்வாய்ப்பட்டு இறந்ததாக வரலாறில் எழுதியுள்ளனர்.


2. பிரித்திவி ராஜ் சவுகான் தரெய்ன் போரில் முகமது கோரியால் கொல்லப்பட்டதாக தான் பள்ளி வரலாற்றுப் புத்தகத்தில் படித்தேன். உண்மையில் பிரித்வி ராஜ் சவுகானை குருடாக்கி கோரி சிறைப்பிடித்து ஆப்கன் அழைத்து சென்றான். குருடானாலும் தன்னால் அம்பு விட முடியும் என்ற பிருத்வியை சோதனை செய்ய கோரி வில்லைக் கொடுத்ததான். உடனே கோரியை அம்பெய்தி கொன்றார் பிரித்வி ராஜ். அதன் பின்னரே ஆப்கான் வெறியர்களால் கொல்லப்பட்டார்.போன வருடம் பத்திரிக்கை செய்தியை படித்த பின் தான் எனக்கு உண்மை தெரிந்தது.

3. முகமது கஜினி 17முறை படையெடுத்து தோற்றான் என்றும் 18வது முறை தான் வென்று இந்தியாவை கொள்ளையடித்தான் என்றும் வரலாறு புத்தகம் சொல்கிறது. உண்மையில் 17 முறையும் போரில் வென்ற கஜினி ஒவ்வொரு .முறையும் நாட்டை கொள்ளையடித்தான். 18வது முறை சோமநாதர் ஆலயத்தில் பணிபுரிந்த 5000 பிராமணர்களை வெட்டிக் கொன்று விட்டு , கோவிலையும் இடித்துவிட்டு கோவிலில் இருந்த பல டன் தங்க நகைகளை நூற்றுக்கணக்கான யானைகளில் ஏற்றி திருடிச் சென்றான்.

4.அக்பர் தி கிரேட் என்கிறது வரலாறு. அக்பர் தி வொர்ஸ்ட் தான் உண்மை வரலாறு. ராணி துர்காவதியிடம் தோற்ற அக்பர் வரலாற்றை மறைத்தது பள்ளி வரலாறு.

5. திப்பு சுல்தான் விடுதலை வீரர் என்கிறது வரலாறு . மதம் மாற மறுத்த ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை அவன் படுகொலை செய்ததை மறந்துவிட்டது.

6. முகலாயர்களை பற்றி பக்கம் பக்கமாக எழுதிவிட்டு வீர சிவாஜியைப் பற்றி ஒரு பாராவும் , விஜய நகர பேரரசை தோற்றுவித்தவர் ஹரிஹரர் , புக்கர் என்ற இரு சகோதரர்கள் என்ற ஒற்றை வரியில் விஜய நகர வரலாற்றை முடித்து விட்டது.


7. நத்தம் கணவாய் போரில் 500 பிரிட்டிஷ் படைவீரர்களை கொன்று குவித்து அவர்கள் கொள்ளையடித்த அழகர் சிலைய மீட்ட தன்னரசு நாட்டு கள்ளர்கள் பற்றி ஒரு வரியும் இல்லை. ஆனால் பிரிட்டிஷ்காரர் எழுதிய வரலாற்றில் இச்சம்பவம் உள்ளது.

8. உப்பு பிரிட்டிஷை தவிர மற்றவர்கள் விற்க தடை விதித்து பாரம்பரியமாக உப்பு விற்ற உப்புக் குறவர்கள் , லம்பாடிகள் , எருகுலர் ,பஞ்ஞாராக்கள் ஆகியோர்களை திருடர்கள் என்று பொய் குற்றம் சாட்டி குற்றப்பரம்பரை சட்டத்தில் சேர்த்து அவர்களை பிரிட்டிஷ் அரசாங்கம் கொன்று குவித்ததை புத்தகத்தில் மறைத்தனர் . தக்கீ , லம்பாடி உள்ளிட்ட பல பழங்குடியினர்களை கொன்று முற்றிலும் அழித்துவிட்டனர் பிரிட்டிஷ் கொலைக்காரர்கள்.

10.பிரிட்டிஷ் காரனின் வருகையால் இந்தியா வளர்ந்தாக புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது . அவன் 200 ஆண்டுகளை இந்தியாவில் கொள்ளையடித்த பொருட்களை திருப்பி கொடுத்தால் ஒவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் 50 கோடி வரை இந்திய அரசு வழங்கலாம். அந்தளவு திருடியுள்ளது. இவர்கள் திருட்டின் ஆதாரம் இங்கிலாந்து ராணி கிரிடத்தில் இருக்கும் கோஹினூர் வைரம் தான் சாட்சி

11.மதமாற்றம் செய்ய வந்த கான்ஸ்டாண்டி ஜோசப் பெஸ்கி , கால்டுவெல் போன்றவர்களை தமிழுக்கு தொண்டு செய்ய வந்தவர்கள் என போலியாக எழுதியது வரலாறு.

12. கொலைக்காரன் டயரை சுட்ட உத்தம் சிங் வரலாற்றை பாடப்புத்தகத்தில் இருந்து றைத்தது.

13. காந்தி தான் இந்தியாவிற்கு அஹிம்சை முறையில் விடுதலை வாங்கி தந்தார் என்று பொய் வரலாறை எழுதியது.

14. நேதாஜியின் தாக்குதலும் பம்பாய் கலகமும் விடுதலைப்போருக்கு இந்தியர்களை ஆயுதமேந்த வைத்ததையும் , பிரிட்டிஷ் தளபதிகளை அவர்கள் கீழ் பணிபுரிந்த இந்தியப் படையினர் அடித்து கொன்றதும் வெள்ளையர்களை காண்டாலே நாடு முழுக்க இந்தியர்கள் தாக்குதல் செய்ய தொடஙகிய பின்னரே விடுதலை கிடைத்தது என்பதை முற்றிலும் மறைத்தது.

15.பூலித்தேவர் , அம்மங்கா , கிட்டூர் ராணி , ராணி வேலு நாச்சியார் எல்லாம் வெள்ளையனை தோற்கடித்த வரலாற்றை மறைத்தது.மருதுபாண்டியர்கள் குடும்பத்தில் ஒருவரைக் கூட விடாமல் மொத்த குடும்பத்தையும் அவர்களுடன் 300 பேருக்கும் மேற்பட்டவர்களை ஒரே நாளில் தூக்கிலிட்டு கொன்றதையும் மறைத்துவிட்டனர்.

16. ஒரு நாள் கூட விடுதலைக்கு போராடாத பெரியாரை விடுதலை வீரர் பட்டியலில் சேர்த்தது.

17. சோழரும் பாண்டியரும் கம்போடியாவை தாண்டி இந்தோனேசியா வரை ஆட்சி செய்ததை மறைத்தது. பெரும் கொலைக்காரன் அசோகனை புத்தர் போன்று சித்தரித்தது.

18.சேரனின் வரலாற்றை எழுதாமலே விட்டது.

19. முழு காஷ்மீரும் இந்தியா மீட்டதைப் போல் எழுதியது.

இன்னும் நிறைய பொய் வரலாறுகள் தான் நாம் பள்ளியில் படித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக