சின்ன உருளைக்கிழங்கு – 100 கிராம் வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 40 கிராம்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 5 பல்
அரைத்த தேங்காய் – ஒரு கப் மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்
வெள்ளை உளுந்து – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
சின்ன உருளைக்கிழங்கை வேக வைத்து எண்ணெயில் பொரித்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். தேங்காய், கடலைப்பருப்பு, வெள்ளை உளுந்து, சிறிது சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கி அரைத்துக் கொள்ளவும். பூண்டினை இடித்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி… சிறிது சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
பின்னர் தக்காளி சேர்த்து கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து, அரைத்த தேங்காயையும் சேர்த்துக் கிண்டவும்.
கடைசியில், பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் கிளறி, உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக