பெண்ணின் உடல் நிலை சரியாக உள்ளதா என கண்டுபிடிக்க ஓரே வழி அவர்கள் மாத விலக்கு சரியான கால கட்டங்களில் வருகிறதா என பார்த்தால் போதும்
அந்த மாத விலக்கு பிரச்சனை அதை எவ்வாறு தீர்ப்பது.
மாதவிடாய்:
மாதவிலக்கு விஷயத்தில் பல பெண்களுக்கும் பிரச்னை. சிலருக்கு சீக்கிரமே வருவதும், சிலருக்கு தள்ளித் தள்ளி வருவதுமாக ஆளாளுக்கு பிரச்னைகள்.
பூப்பெய்திய பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்குகிறவர்கள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது ஏன்?
யாருக்கெல்லாம் பரிசோதனையும், சிகிச்சைகளும் அவசியம்?
‘‘கர்ப்பப் பையில உள்ள ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களால கர்ப்பப் பை திசுக்கள் இயங்கி, மாதவிலக்கு வருது!!"
இந்தச் செயலுக்கு சினைமுட்டைப்பையோட இயக்கமும், பிட்யூட்டரி சுரப்பியோட இயக்கமும் தேவை.
மாதவிலக்கு தள்ளிப் போகவோ, குறிப்பிட்ட நாளைவிட முன்னதாகவே வரவோ முக்கிய காரணம் ஹார்மோன் கோளாறு.
அதுக்கடுத்த முக்கிய காரணம் உடல் பருமன்.
ரத்த சோகை, தைராய்டு,
சினைப்பை நீர்க்கட்டி,
மன அழுத்தம்,
தூக்கமின்மை,
கிருமித் தொற்று,
கர்ப்பப் பை கட்டி,
சீதோஷ்ண நிலை வேறுபாடு
வேற சில காரணங்களாலும், மாதவிலக்கு சுழற்சி முறை தவறலாம்.
28 முதல் 30 நாள்களுக்குள்ள மாதவிலக்கு வந்தா, அது நார்மல். 25 நாளைக்குள்ளயோ, 35 நாள்களுக்குப் பிறகோ வந்தா, அது அசாதாரணம். காரணங்களைக் கண்டுபிடிச்சா, இந்தப் பிரச்னையை மாத்திரைகள் மூலமே சரி பண்ணலாம்.
உடல் பருமன் காரணமா இருந்தா, எடையைக் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்தாலே, மாதவிலக்கு சுழற்சி தானா சரியாகும். ரத்த சோகை மற்றும் தைராய்டு காரணமா இருந்தா, அதுக்கான சிகிச்சைகள் அவசியம். தொற்றுக் கிருமிக்கும் சிகிச்சை முக்கியம்.
மாதவிலக்கு சுழற்சி சரியில்லாதவங்க, ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவுக்கான சோதனை, ரத்தம் உறையற தன்மைக்கான சோதனை, தைராய்டு, ஹார்மோன் சோதனைகளை செய்யணும். தேவைப்பட்டா அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனும் செய்து பார்க்கலாம்.
சினைப்பை கட்டி மற்றும் கர்ப்பப் பை கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டா, அதை சரியாக்க, இன்றைய நவீன மருத்துவத்துல மருந்துகளும், லேப்ராஸ்கோப்பி சிகிச்சைகளும் இருக்கு.
மேலே சொன்ன டெஸ்ட்டுகள்ல எந்தப் பிரச்னையும் இல்லாம, வெறும் ஹார்மோன் மாறுதல்களால மாதவிலக்கு சுழற்சி மாறிப் போனா, அதுக்கு சிகிச்சைகள் தேவையில்லை. பெரும்பாலும் வயதுக்கு வந்த புதுசுல இப்படி இருக்கும்.
அதே மாதிரி 40 வயசுக்குப் பிறகு, மெனோபாஸ் வரைக்கும் உண்டாகிற மாறுதல்களுக்கும் பெரிய சிகிச்சைகள் தேவைப்படாது. அடிக்கடி மாதவிலக்கு வந்தாலோ, அதிக ரத்தப் போக்கு இருந்தாலோ, அலட்சியப்படுத்தாம உடனே சிகிச்சை எடுத்துக்கணும்.
மெனோபாஸுக்கு பிறகு ரத்தப் போக்கு இருந்தாலும், அது புற்றுநோய்க்கான அறிகுறியா இருக்கலாம்னு சந்தேகிச்சு, பரிசோதனையையும்,சிகிச்சைகளையும் எடுத்துக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.
மாதவிலக்கு சீராக வர
மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி விதை - 1 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
சின்ன
வெங்காயம் - 3
வெற்றிலை - 2
மிளகு - அரை ஸ்பூன்
இவைகள எடுத்து தண்ணி விட்டு சூப் மாதிரி செஞ்சு தேவையான அளவு உப்பு சேத்து காலையிலயும மாலையிலயும் சாப்பாட்டுக்கு முன்போ பின்போ சாப்பிட்டு வரவும்
மாத விலக்கு நேரத்துல 10 நாளுன்னு 3 மாசத்துக்கு தொடர்ந்து இத சாப்பிட்டுக்கிட்டு வந்தா மாதவிலக்கு பிரச்சனை காணாம போயிடும்..
இந்த சூப்ப சாதாரண நாட்கள்ள கூட மற்ற பெண்களும் சாப்பிடலாம். இது உடம்புக்கு நல்ல ஆரோக்கியத்த தரும்..
ஹார்மோன் பிரச்னை
உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும்.
இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும்
இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.
முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.
உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
பாட்டி வைத்தியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக