சிக்கன் - அரை கிலோ
சின்னவெங்காயம் - 150 கிராம்
பூண்டு - 5 பல்
இஞ்சி - சின்னத்துண்டு
வறுத்து பொடிக்க தேவையான பொருட்கள்
வர கொத்தமல்லி - ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - இரண்டு
மிளகு 2 ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - குழி கரண்டி அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வறுக்கக் கொடுத்த பொருட்களை வாசனை வரும் வரை வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
பூண்டு, இஞ்சி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் உற்றி நறுக்கிய சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதோடு கழுவி வைத்துள்ள சிக்கன் தேவையான உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து சிக்கனின் நன்கு வேக விடவும்.
சிக்கன் ஒரு முக்கால் பதம் வெந்தவுடன் பொடித்த மசாலா பொடியையும் சேர்த்து நன்கு கிளறி தண்ணீர் வற்றிய சிக்கன் நன்கு வெந்தவுடன் கருவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான பெப்பர் சிக்கன் வறுவல் ரெடி.
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக