>>
  • மூட்டுவலிக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வுகள்
  • >>
  • திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்
  • >>
  • 16-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உலக வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முதல் 5 சம்பவங்கள் - Part 1
  • >>
  • இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தெரியுமா?
  • >>
  • புளி ரசம் செய்வது எப்படி?
  • >>
  • தோல் நோய்களைத் தீர்க்கும் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்
  • >>
  • 14-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • மகாமக குளத்தில் 12 மகாமகங்களுக்கு சமமான புண்ணிய பலன் பெற விரும்புகிறீர்களா?
  • >>
  • சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா பற்றிய பதிவுகள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 26 ஜனவரி, 2024

    26-01-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

    தை 12 - வெள்ளிக்கிழமை

    🔆 திதி : முழுவதும் பிரதமை.

    🔆 நட்சத்திரம் : காலை 11.07 வரை பூசம் பின்பு ஆயில்யம்.

    🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.34 வரை அமிர்தயோகம் பின்பு மரணயோகம்.

    சந்திராஷ்டம நட்சத்திரம் 

    💥 கேட்டை, மூலம் 

    பண்டிகை

    🌷 கோயம்புத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி வாண வேடிக்கையுடன் தெப்பத் திருவிழா.

    🌷 பழனி ஸ்ரீஆண்டவர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு.

    🌷 சென்னை ஸ்ரீசிங்காரவேலவர், கபாலீஸ்வரர் ஆகியோருக்கு தெப்ப உற்சவம்.

    வழிபாடு

    🙏 மீனாட்சி அம்மனை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.

    விரதாதி விசேஷங்கள் :

    💥 வாஸ்து நாள்

    எதற்கெல்லாம் சிறப்பு?

    🌟 கிணறு வெட்ட ஏற்ற நாள்.

    🌟 நவகிரக சாந்தி செய்ய சிறந்த நாள்.

    🌟 உபகரண பழுதுகளை சரிசெய்ய உகந்த நாள்.

    🌟 மந்திர பிரயோகம் செய்ய ஏற்ற நாள்.
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷ லக்னம் 11.14 AM முதல் 12.57 PM வரை 

    ரிஷப லக்னம் 12.58 PM முதல் 02.59 PM வரை 

    மிதுன லக்னம் 03.00 PM முதல் 05.10 PM வரை 

    கடக லக்னம் 05.11 PM முதல் 07.20 PM வரை

    சிம்ம லக்னம் 07.21 PM முதல் 09.23 PM வரை 

    கன்னி லக்னம் 09.24 PM முதல் 11.24 PM வரை 

    துலாம் லக்னம் 11.25 PM முதல் 01.31 AM வரை 

    விருச்சிக லக்னம் 01.32 AM முதல் 03.43 AM வரை 

    தனுசு லக்னம் 03.44 AM முதல் 05.50 AM வரை 

    மகர லக்னம் 05.51 AM முதல் 07.47 AM வரை 

    கும்ப லக்னம் 07.48 AM முதல் 09.29 AM வரை 

    மீன லக்னம் 09.30 AM முதல் 11.09 AM வரை
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
       இன்றைய ராசி பலன்கள்
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷம்

    செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முயற்சியில் புதிய அனுபவம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவும், புதிய பாதையும் புலப்படும். நண்பர்களின் ஆதரவுடன் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். இனம்புரியாத தேடல்களால் குழப்பம் ஏற்படும். கடன் சார்ந்த உதவி சாதகமாகும். பெருமை நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

    அஸ்வினி : தடைகள் விலகும்.
    பரணி : அனுபவம் உண்டாகும்.
    கிருத்திகை : உதவி சாதகமாகும்.
    ---------------------------------------
    ரிஷபம்

    குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களினால் ஆதாயம் உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வெளிவட்டார நட்பு மேம்படும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான சூழல் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

    கிருத்திகை : செல்வாக்கு அதிகரிக்கும். 
    ரோகிணி : நட்பு மேம்படும். 
    மிருகசீரிஷம் : லாபகரமான நாள்.
    ---------------------------------------
    மிதுனம்

    செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். உறவினர்களின் மத்தியில் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். புதிய பொருட்களின் சேர்க்கை ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதால் ஆதாயம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

    மிருகசீரிஷம் : தாமதங்கள் நீங்கும். 
    திருவாதிரை : மேன்மையான நாள்.
    புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.
    ---------------------------------------
    கடகம்

    எதிர்பார்த்த சில காரியத்தில் காலதாமதமாகும். திடீர் பயணம் உண்டாகும். எந்தவொரு செயலையும் யோசித்து மேற்கொள்வதால் நன்மை ஏற்படும். கவனக்குறைவால் பணிகளில் தடுமாற்றம் உண்டாகும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். இணையப் பணிகளில் புதிய வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வாகன மாற்றம் சார்ந்த சிந்தனை மேம்படும். ஜெயம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 7
    அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

    புனர்பூசம் : பயணம் நிறைந்த நாள்.
    பூசம் : தடுமாற்றம் உண்டாகும்.
    ஆயில்யம் : சிந்தனை மேம்படும்.
    ---------------------------------------
    சிம்மம்

    எதிர்பார்த்த தனவரவு இழுபறியாகும். சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனங்களால் சில விரயங்கள் உண்டாகும். வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். பயனற்ற கருத்துக்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

    மகம் : தனவரவு இழுபறியாகும்.
    பூரம் : கவனம் வேண்டும்.
    உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.
    ---------------------------------------
    கன்னி

    திடீர் தனவரவுகளால் சங்கடங்கள் நீங்கும். அரசு வழியில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். எதையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பகை விலகும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

    உத்திரம் : எதிர்பார்ப்பு நிறைவேறும்.  
    அஸ்தம் : ஈடுபாடு ஏற்படும்.
    சித்திரை : முன்னேற்றம் உண்டாகும். 
    ---------------------------------------
    துலாம்

    வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். புதிய செயல்திட்டங்களில் கவனம் வேண்டும். நண்பர்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஓய்வு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

    சித்திரை : மந்தத்தன்மை விலகும்.
    சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
    விசாகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
    ---------------------------------------
    விருச்சிகம்

    வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ப வரவு உண்டாகும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நிலம் தொடர்பான விற்பனையில் சற்று நிதானத்தோடு செயல்படவும். சிலரின் மறைமுகமான ஆதரவுகளால் சில காரியத்தை செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் சுபச்செய்தி கிடைக்கும். மறதி விலகும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

    விசாகம் : அலைச்சல் அதிகரிக்கும். 
    அனுஷம் : அனுசரித்துச் செல்லவும். 
    கேட்டை : சுபமான நாள்.
    ---------------------------------------
    தனுசு

    மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடங்கள் அதிகரிக்கும். முயற்சியில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்களால் சில பிரச்சனைகள் ஏற்படும். சூழ்நிலையைப் புரிந்து அதற்கேற்ப செயல்படவும். எதிர்பார்ப்பு தாமதமாக நிறைவேறும். பொறுமை வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

    மூலம் : குழப்பம் தோன்றும். 
    பூராடம் : மாற்றம் ஏற்படும்.
    உத்திராடம் : தாமதம் உண்டாகும்.
    ---------------------------------------
    மகரம்

    மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். நேர்மறையான சிந்தனை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலை குறையும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு 
    அதிர்ஷ்ட எண் : 7
    அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

    உத்திராடம் : தன்னம்பிக்கை பிறக்கும். 
    திருவோணம் : தேடல் அதிகரிக்கும்.
    அவிட்டம் : அமைதியான நாள்.
    ---------------------------------------
    கும்பம்

    சுபகாரியம் சார்ந்த விரயம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆன்மிக காரியங்களால் மன அமைதி கிடைக்கும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பயனற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். பிரியமானவர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வரவு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

    அவிட்டம் : சுறுசுறுப்பான நாள்.
    சதயம் : ஆதாயம் உண்டாகும்.
    பூரட்டாதி : முடிவுகளை எடுப்பீர்கள். 
    ---------------------------------------
    மீனம்

    சிந்தித்துச் செயல்படுவதால் நன்மை உண்டாகும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் தேடி வருவார்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெற்றோர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உதவி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்

    பூரட்டாதி : நன்மை உண்டாகும். 
    உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும். 
    ரேவதி : வெற்றி உண்டாகும். 
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக