🔆 திதி : இரவு 11.56 வரை பௌர்ணமி பின்பு பிரதமை.
🔆 நட்சத்திரம் : காலை 09.13 வரை புனர்பூசம் பின்பு பூசம்.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.34 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 கேட்டை
பண்டிகை
🌷 மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தங்க குதிரையிலும், அம்பாள் வெள்ளி சிம்மாசனத்திலும் வண்டியூரில் எழுந்தருளி தெப்ப திருவிழா.
வழிபாடு
🙏 குலதெய்வத்தை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 பௌர்ணமி
💥 தை பூசம்
💥 கரிநாள்
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 விதை விதைக்க நல்ல நாள்.
🌟 பணி சார்ந்த ஆலோசனை செய்ய ஏற்ற நாள்.
🌟 கட்டிட பணிகளை தொடர சிறந்த நாள்.
🌟 பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 11.18 AM முதல் 01.01 PM வரை
ரிஷப லக்னம் 01.02 PM முதல் 03.03 PM வரை
மிதுன லக்னம் 03.04 PM முதல் 05.14 PM வரை
கடக லக்னம் 05.15 PM முதல் 07.24 PM வரை
சிம்ம லக்னம் 07.25 PM முதல் 09.27 PM வரை
கன்னி லக்னம் 09.28 PM முதல் 11.28 PM வரை
துலாம் லக்னம் 11.29 PM முதல் 01.35 AM வரை
விருச்சிக லக்னம் 01.36 AM முதல் 03.47 AM வரை
தனுசு லக்னம் 03.48 AM முதல் 05.54 AM வரை
மகர லக்னம் 05.55 AM முதல் 07.51 AM வரை
கும்ப லக்னம் 07.52 AM முதல் 09.33 AM வரை
மீன லக்னம் 09.34 AM முதல் 11.13 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்
விலகிச்சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். அரசு வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மறதியால் அலைச்சல் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறுவதில் காலதாமதம் ஏற்படும். விமர்சன பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்பு நீங்கும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அஸ்வினி : ஒத்துழைப்பு ஏற்படும்.
பரணி : காலதாமதம் ஏற்படும்.
கிருத்திகை : எதிர்ப்பு நீங்கும்.
---------------------------------------
ரிஷபம்
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கிடைக்கும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்பு ஏற்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : ஆலோசனை கிடைக்கும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களால் அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை மாற்றியமைப்பீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனை குறையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மிருகசீரிஷம் : அலைச்சல் ஏற்படும்.
திருவாதிரை : உதவி கிடைக்கும்.
புனர்பூசம் : பிரச்சனை குறையும்.
---------------------------------------
கடகம்
அரசு வழியில் இருந்துவந்த நெருக்கடி நீங்கும். மனதில் புதுவிதமான சிந்தனை அதிகரிக்கும். ஆதாயகரமான முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்து செல்லும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : சிந்தனை அதிகரிக்கும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
கடன் சார்ந்த செயல்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். புதிய நபர்களிடம் கவனம் வேண்டும். மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதால் மன அமைதி ஏற்படும். வெளியூர் பயணங்களினால் உடலில் சோர்வு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மகம் : நெருக்கடிகள் உண்டாகும்.
பூரம் : ஆர்வமின்மையான நாள்.
உத்திரம் : சோர்வு உண்டாகும்.
---------------------------------------
கன்னி
சகோதரர்களால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். நட்பு வட்டம் விரிவடடையும். பொன், பொருள் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். பங்குதாரர்களால் ஏற்பட்ட இன்னல் அகலும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : மதிப்பு மேம்படும்.
சித்திரை : இன்னல் அகலும்.
---------------------------------------
துலாம்
தாயின் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனைகள் சாதகமாகும். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
சித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.
சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.
விசாகம் : முடிவு கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரியுடன் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருவாயில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேம்படும். வியாபார விருத்தி சார்ந்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
அனுஷம் : ஏற்ற, இறக்கமான நாள்.
கேட்டை : முயற்சிகள் மேம்படும்.
---------------------------------------
தனுசு
மறைமுக எதிர்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். பிறரை நம்பி எந்தவொரு பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் அமைதியை கையாளவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மூலம் : அலைச்சல் அதிகரிக்கும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------
மகரம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சில பிரச்சனைகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனதில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த சோர்வு விலகும். வருவாய் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவோணம் : அறிமுகம் ஏற்படும்.
அவிட்டம் : சோர்வு விலகும்.
---------------------------------------
கும்பம்
எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் சார்ந்த பயணம் கைகூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்வீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும். சிரமம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : பயணம் கைகூடும்.
சதயம் : தடைகள் விலகும்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். அரசு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். உறவினர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனை மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
உத்திரட்டாதி : தேவைகள் பூர்த்தியாகும்.
ரேவதி : சிந்தனை மேம்படும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக