🔆 திதி : அதிகாலை 04.41 வரை பஞ்சமி பின்பு சஷ்டி.
🔆 நட்சத்திரம் : இரவு 09.46 வரை கிருத்திகை பின்பு ரோகிணி.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.22 வரை மரணயோகம் பின்பு இரவு 09.46 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 உத்திரம், அஸ்தம்
பண்டிகை
🌷 திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.
🌷 திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லி தாயார் வாகனத்தில் புறப்பாடு.
🌷 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகனத்தில் சேவை.
வழிபாடு
🙏 முருகரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 கிருத்திகை விரதம்
💥 வளர்பிறை சஷ்டி
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 நிலத்தை தோண்டுவதற்கு சிறந்த நாள்.
🌟 கடன் அடைக்க ஏற்ற நாள்.
🌟 நோய்க்கு மருந்துண்ண உகந்த நாள்.
🌟 சிலம்பாட்டம் பயிலுவதற்கு நல்ல நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 08.01 AM முதல் 09.44 AM வரை
ரிஷப லக்னம் 09.45 AM முதல் 11.46 AM வரை
மிதுன லக்னம் 11.47 AM முதல் 01.58 PM வரை
கடக லக்னம் 01.59 PM முதல் 04.07 PM வரை
சிம்ம லக்னம் 04.08 PM முதல் 06.10 PM வரை
கன்னி லக்னம் 06.11 PM முதல் 08.12 PM வரை
துலாம் லக்னம் 08.13 PM முதல் 10.18 PM வரை
விருச்சிக லக்னம் 10.19 PM முதல் 12.30 AM வரை
தனுசு லக்னம் 12.31 AM முதல் 02.37 AM வரை
மகர லக்னம் 02.38 AM முதல் 04.31 AM வரை
கும்ப லக்னம் 04.32 AM முதல் 06.12 AM வரை
மீன லக்னம் 06.13 AM முதல் 07.56 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்
மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். புதிய வகை உணவுகள் மீது ஆர்வம் உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் ஏற்படும். கலை தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் புதிய நம்பிக்கை பிறக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : ஆதாயம் ஏற்படும்.
கிருத்திகை : நம்பிக்கை பிறக்கும்.
---------------------------------------
ரிஷபம்
சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். மனதளவில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமான தேடல் அதிகரிக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். அசதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
ரோகிணி : தேடல் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : சோர்வுகள் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர் தொடர்பான பயணங்களால் நன்மை ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : அனுபவம் உண்டாகும்.
புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.
---------------------------------------
கடகம்
உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
புனர்பூசம் : பொறுப்புகள் குறையும்.
பூசம் : மேன்மை உண்டாகும்.
ஆயில்யம் : புரிதல் மேம்படும்.
---------------------------------------
சிம்மம்
பெற்றோர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனை மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சமூகப் பணிகளில் புதிய பொறுப்பு கிடைக்கும். உலக நடவடிக்கைகளின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
மகம் : மதிப்பு அதிகரிக்கும்.
பூரம் : முடிவு பிறக்கும்.
உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
கன்னி
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் புதிய தேடல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்பு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
உத்திரம் : முன்னேற்றம் ஏற்படும்.
அஸ்தம் : ஆதாயம் உண்டாகும்.
சித்திரை : அதிர்ஷ்டகரமான நாள்.
---------------------------------------
துலாம்
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். மனம் திறந்து பேசுவதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். நண்பர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : நெருக்கடியான நாள்.
சுவாதி : விவேகம் வேண்டும்.
விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.
---------------------------------------
விருச்சிகம்
இழுபறியாக இருந்துவந்த சில விஷயங்களை தீர்ப்பதற்கான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனதில் உயர் கல்வி தொடர்பான சிந்தனை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
விசாகம் : இழுபறி மறையும்.
அனுஷம் : சிந்தனை மேம்படும்.
கேட்டை : அறிமுகம் உண்டாகும்.
---------------------------------------
தனுசு
கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பயண வாய்ப்பு சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்
மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூராடம் : வாய்ப்பு சாதகமாகும்.
உத்திராடம் : புரிதல் மேம்படும்.
---------------------------------------
மகரம்
மனதில் வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் புதிய ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடையே இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.
திருவோணம் : பிரச்சனைகள் தீரும்.
அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
---------------------------------------
கும்பம்
வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் உற்சாகம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூரட்டாதி : வாய்ப்பு கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சவாலான காரியங்களில் ஈடுபட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடலில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். குறுந்தொழில் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.
உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
ரேவதி : எதிர்பார்ப்பு நிறைவேறும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக