Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 15 டிசம்பர், 2017

தடம் மாறும் இளம் பெண்கள் பெற்றோர்களே உஷார் ஒரு உண்மை அலசல் ரிப்போர்ட் ....

தடம் மாறும் இளம் பெண்கள் பெற்றோர்களே உஷார் ஒரு உண்மை அலசல் ரிப்போர்ட் .....


சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன் பயன்பாடு அதிகமாகி வருகின்றது தொழில்நுட்பம் வளர வளர அதன் தீமைகளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது....

சமீபகாலமா மின்னஞ்சலில் ஒரு வலைதளத்தில் (பெயர் குறிப்பிடவேண்டாம் என கருதி பெயரை சொல்லவில்லை)   உறுப்பினர் ஆகுமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்த வண்ணமாக இருக்க... எரிச்சல் அடைந்து ஒரு கட்டத்தில் அந்த வலைத்தளத்தை அணுகினேன்....

எனக்கென ஒரு    சுயவிவர அடையாளத்தை ( profile )உருவாக்கிய சில நொடிகளில் எனது உட்பெட்டியில் (inbox) பெண்களின் பெயர்களை கொண்டு சில நபர்கள் உரையாடல்களை தொடங்கினர் அதில் சில பேர் தனக்கு பணம் தேவைபடுவதாகவும் தனக்கு பணம் அனுப்பினால் எனன வேண்டுமானாலும் செய்யலாம் எனவும் உரையாடல் தொடங்கியது 

சிலர் அவர்களது Whatsapp நம்பரை தந்து பேச அழைப்பு விடுக்கிறார்கள் 
அதில் பெரும்பாலும் இளம் கல்லூரி பெண்கள் Whatsapp மட்டும் அந்த நம்பரை பயன்படுத்துகின்றனர்..

தங்களுக்கு பணம் தேவைபடுவதால் இது மாதிரியாக செயல் படுவதாகவும் அவர்களே ஒத்துக்கொள்கின்றனர்..வெறும் போன் தொடரபு மட்டுமே நேரில் இல்லை எனவும்...

போனில் பேச வீடியோவில் பேச நேரில் பேச என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கட்டணங்கள் நிர்ணயிக்கபடுகிறது    

10 ருபாய் முதல் சில ஆயிரங்கள் வரை பணம் வேண்டும் எனவும் அதை Patym வழியாக அனுப்பிய பின்பு ஆபாச உரையாடல்கள் தொடங்கலாம் எனவும் ஆசை வார்த்தைகள் கூறி உரையாடலை ஆரம்பிக்கின்றன..

இது எந்த மாதிரியான வலைத்தளம் என தெரியாமல் சிலரும்...
தனக்கு தெரிந்த பெண்களை பழிவாங்க சில ஆண்கள் அவர்களது மொபைல் நம்பர் மற்றும் போட்டோ வை அந்த தளத்தில் பரப்பி அவர்களது நிம்மதியை கெடுக்கின்றனர் ...

இதை அறியாத சிலர் அந்த நம்பரை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி அந்த பெண்களையும் சில தவறான பெண்களின் பட்டியலில் சேர்த்து தனது நண்பர்களுக்கும் அந்த பெண்களின் நம்பர்களை அனுப்பி தொல்லை செய்கின்றனர்..

வேலைக்கு ,பள்ளிக்கு கல்லூரிக்கு செல்லும் இளம் பெண்களே உங்களுக்கு தெரியாமல் கூட உங்களது அந்தரங்க தகவல்கள் இது போன்ற சில ஆபாச தளத்தில் பரப்ப படலாம் உஷார்...

 தன் பிள்ளைகள் கேட்டார்கள் என மொபைல் போன் வாங்கி தரும் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளும் தடம் மாறலாம் மாற்றப்படலாம் .. தங்களது போட்டோவை  Whatsapp, Facebook என சமுக வலைதங்களில் வெறும் லைக்கிற்காக வைத்து உங்கள் லைப் ஐ தொலைக்காதீர்...

"இந்த தலைமுறையில் அலகாஹாலிற்கு அடிமையான இளம் தலைமுறைகளை விட 
அண்ட்ராய்டிற்கு அடிமையான இளம் தலைமுறையினரின் எண்ணிக்கையை அதிகம் "

இது  உண்மையா? பொய்யா? என கள ஆய்வு செய்த பின்னரே இந்த பதிவு வெளியிட படுகிறது இதில் 100-இல் 99% தெரிந்தும் 1% பேர் இதில் சம்மந்தம் இல்லாமலும் இருக்கின்றனர்...

                                                                                             இவன் 
ஹரிஹர பாலசுப்ரமணியன்  

, ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக