Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 6 டிசம்பர், 2017

மத்திய அரசின் ஆதாரில் பணிவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு !

ஆதார் எனப்படும் யுனிக்யூ ஐடெண்டிஃபிகேசன் அதார்ட்டி ஆஃப் இண்டியாவில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். ஆதார் அமைப்பில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பு 

ஆதார் அமைப்பில் வேலை வாய்ப்பு பெற டேலி மற்றும் நிர்வாக கணக்குகளை கையாள தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் அது குறித்து அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

அக்கவுண்டன்: 

உதய் ரெக்ரூட்மெண்டில் அக்கவுண்டன் வேலை வாய்ப்பு பணியிடம் ஒன்று  அறிவிக்கப்பட்டுள்ளது . 56 வயதுக்குள் இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். ரூபாய் 5,200 முதல் 20,200 தொகை மாதச் சம்பளமாக பெறுவதுடன் கிரேடு பேயும் ரூபாய் 2,800 தொகை பெறலாம். மேலும் இப்பணி குறித்து தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணைப்பில் அறிந்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

அஸிஸ்டெண்ட் ஆபிசர்: 



ஆதார் ஒருங்கிணைந்த அமைப்பானது மத்திய மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் ஒருங்கிணைந்து அறிவித்துள்ள அறிவிப்புகள் ஆகும். இவ்வமைப்பில் அஸிஸ்டெண்ட் அக்கவுண்ட் ஆபிசர் ஒரு பணியிடத்திற்க்கான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அஸிஸ்டெண்ட் ஆபிசர் பணியிடத்திற்கான வேலை ரூபாய் 9,300முதல் 34,800 வரை சம்பளம் பெறலாம் அத்துடன் கிரேடு பே தொகையாக ரூபாய் 4,800 தொகை பெறலாம்.

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சுமார் 2 வருடம் அல்லது ஐந்து வருடம் ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் இருக்கும். இது அரசு சம்மந்தப்பட்ட முழுமையான பனியாகும் ஆகையால அரசு வேலையில் இருப்போர் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். தனி நபர்கள் இப்பணிக்கு வின்ணப்பிக்க முடியாது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் 31.1.2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆதார் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 
அக்கவுண்டன், அக்கவுண்டன் ஆஃபிஸர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 

முகவரி: 

டெப்புட்டி டைரக்டர், 
காஞ்சியா பவன், 
நம்பர் 49,
3 புளோர், 
பெங்களூர், 560001

டெக்னிசியன் பணியிடம் : 


டெக்னிசியன் பணியிடம் மொத்தம் மூன்று பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1/1/ 2018க்குள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு மாதச்சம்பளமாக ரூபாய் 9,300 முதல் 34,800 வரை பெறலாம். டெக்னீசியன் பணிக்கு ஐடி சார்ந்த துறையில் அனுபவம் இருக்க வேண்டும். டெக்னாலஜி, லினக்ஸ், டேட்டா செண்டர் ஆப்ரேசன் தெரிந்திருக்க வேண்டும். டெக்னாலஜி நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டும். டெக்னிசியன் பணிக்கு பிஇ மற்றும் டெக்னாலஜி படிப்புகள் மற்றும் பிஎஸ்சி முடித்திருக்க வேண்டு.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி : 


டெப்புட்டி டைரக்டர் 
ஜென்ரல் டெக்னாலஜி செண்டர் 
கவ்ர்ண்மெண்ட் ஆஃப் இண்டியா , 
ஆதார் காம்பளக்ஸ், 
நிதி லேயவுட், 
டாடா நகர், 
கோடிகே ஹல்லி, 
பெங்களூர் , 
பின் கோடு 560092

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக