Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 டிசம்பர், 2017

உங்கள் ஆதார் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா..? கண்டுபிடிப்பது எப்படி?

உங்களுக்குத் தெரியுமா உங்கள் ஆதார் கார்டு எங்கு எல்லாம், எப்போதெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்று கண்டறிய முடியும் என்று? இந்தியாவில் பல சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. 

அதே நேரம் உங்கள் ஆதார் விவரங்களைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகளும் உண்டு. இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் தனது இணையதளத்தில் ஆதார் கார்டு வைத்துள்ளவர்கள் அவர்களது ஆதார் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று சரிபார்ப்பது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

இணையதளம் உங்கள் ஆதார் கார்டு பற்றிய விவரங்களைப் பெற https://resident.uidai.gov.in/notification-aadhaar இணைப்பினை திறக்கவும்.

தேவையான விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிற்குச் சென்ற பிறகு உங்கள் ஆதார் எண் மற்றும் பாதுகாப்புக் குறியீட்டினை உள்ளிடவும். பிறகு ஒரு முறை கடவுச்சொல்லை பெற கிளிக் செய்யவும்.

ஒரு முறை கடவுச் சொல் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டு உள்ள மொபைல் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவு சொல்லினை உள்ளிடவும். முக்கியம் உங்கள் ஆதார் கார்டுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கும், ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவும்.

தரவு ஒரு முறை கடவுச் சொல்லை உள்ளிட்ட பிறகு தேவையான காலத்தினைத் தேர்வு செய்வதற்காகத் தெரிவு கிடைக்கும். உங்களுக்குத் தேவைப்படும் காலகட்டத்தினை உள்ளிட்ட விவரங்களைப் பெறலாம்.

முழு விவரங்கள் கிடைக்காது எனினும் உங்கள் கார்டு யாரால் பயன்படுத்தப்பட்டது, எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்களை இங்குப் பார்க்க முடியாது. தேவையில்லாமல் ஏதேனும் உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சந்தேகம் இருந்தால் உங்கள் ஆதார் கார்டுக்கு பூட்டுப் போடலாம்.
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக